ஆசிரியர் கூட்டணி – வரலாறு

கற்பிக்கும் நாம்

கற்க வேண்டிய

கடந்த கால

கள வரலாறு!

இயங்காத எதுவும்

இயக்கம் அல்லவே! – இது

இயக்க வரலாறல்ல,

இயங்கிய வரலாறு!

நமக்காக நம்முன்னோர்

நேற்றுவரை இயங்கியபடி

நாளைய நம்மவர்க்காய்

நாமும் தொடர்ந்திட,

நினைவூட்டலாய் இப்ப இப்பதிவு!

🔥
🛡 கேரளத்தின் மலபார், கர்நாடகத்தின் மங்களுர், ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், தமிழகத்தின் 25 மாவட்டங்கள் உள்ளடங்கிய *சென்னை இராஜதானியில் முதன் முதலில் மலபாரில் தான் ஆசிரியர் சங்கம்* உதயமானது.

🔥
🛡 கோழிக்கோடு, வளநாடு, பொன்னாஜி, பாலக்காடு ஆகிய பகுதிகளில் பகுதிவாரியாகவும், தாலுகா அளவிலும் *அகில மலபார் உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கம் 1936-ல்* வடகரையில் உருவாக்கப்பட்டது.

🔥
🛡 ஆரம்பப்பள்ளி முதல் கல்லுரி வரை பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்ட சங்கமாக *தென்னிந்திய ஆசிரியர் சங்கம்* செயல்படத் தொடங்கியது. SITU(South Indian Teachers’ Union) அமைப்பில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதன்மையாக்கப்படவில்லை. சங்க பொறுப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை.

🔥
🛡 _இந்தியா விடுதலை பெற வேண்டும் அன்னிய ஆட்சி அகற்றப்பட வேண்டும், என்ற தீர்மானத்தை நிறைவேற்ற அன்றைய தலைமை மறுத்து வெளிநடப்பு_ செய்த சமயத்தில் *மாஸ்டர் இராமுண்ணி தலைமைப் பொறுப்பை ஏற்று* அத்தீர்மானத்தை நிறைவேற்றினார்.

🔥
🛡 *1946-ல்* பெல்லாரியில் நடைபெற்ற மாநாட்டில் ஈ.எம்.சுப்பிரமணியம் தலைவராகவும் வா.இராமுண்ணி பொதுச்செயலாளராகவும் கொண்ட *சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம்* என்னும் புதிய சங்கம் அமைக்கப்பட்டது.

அம்மாநாட்டில்,

★ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12, ரூ.18, ரூ.50

★ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் அல்லாது *மாதந்தோறும் ஊதியம் வழங்க* வேண்டும்

என்னும் கோரிக்கைகளுடன் *வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு* அறைகூவல் விடப்பட்டது.

🔥
🛡 🚲🚩🚲🚩🚲🚩🚲🚩🚲🚩🚲🚩
*மிதிவண்டிப் பிரச்சாரப் பயணம் :*

மாஸ்டர் இராமுண்ணி தலைமையில் 13.01.1947 அன்று மிதிவண்டி பிரச்சாரப்பயணமாக கோழிக்கோட்டிலிருந்து 19 ஆசிரியர்கள் பயணம் மேற்கொண்டு பாலக்காடு, கோவை, சேலம், வேலூர், காஞ்சிபுரம் வழியாக 30.01.1947 அன்று சென்னையை அடைந்து முதல்வர் பிரகாசத்திடம் மாநாட்டுத் தீர்மானங்களை அளித்தனர்.

*1949ல் சென்னை இராஜதானியின் தலை நகரான சென்னையில் முதல் மாநாடு* நடத்தப்பட்டது. அது முதல் மாஸ்டர் சென்னையில் குடியேறி பொதுச்செயலாளர் பணியை ஆற்றினார்.

*1952-ல்* முதல்வர் இராஜாஜியின் *குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து* சென்னையில் நடைபெற்ற 2ம் மாநில மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.

தஞ்சையில் இராமையாத்தேவர், சேலத்தில் ராமசாமி ரெட்டியார் தலைமையில் 2-வது மதிவண்டிப் பேரணி நடத்தப்பட்டு அது சென்னையை அடைந்தது.

*1956-ல்* மொழி வழி மாநிலங்கள் உருவானதால் சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளம் என்பது *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

*1979-ல்* உள்ளாட்சி நிறுவனங்களின்
★அதிகாரத் தலையீடு
★அதிகாரத் துஷ்பிரயோகம்
★விதி மீறல்கள்
★ஓய்வூதியம்
உள்ளிட்ட சலுகைகளுக்காக மறியல் போராட்டம்.

*1981-ல்* ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்களை *அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி* நடைபெற்ற *மறியல்* போராட்டம்.

*1983-ல்* கல்வியல்லாத *பிற பணிகளிலிருந்து விடுவிக்க* நடைபெற்ற *மறியல்* போராட்டம்

போன்ற வீரம் செறிந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை ஈடுபடுத்திச் சிறை சென்று குறிப்பிடத்தக்க உரிமைகளையும் பலன்களையும் பெற்றுத்தருவதில் பெரும் பங்காற்றியவர்கள் நமது இயக்க முன்னோடிகள்.

1936 முதல் 1984 வரை உள்ள 48 ஆண்டுகளின் வரலாறும் படிப்பினைகளும் நமது முன்னவர்தம் உழைப்பும் தியாகமும் இணைந்ததாகும்.

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here