🌹

*22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொள்ளும் தோழர்களே! உங்களுக்கான பணிப்பாதுகாப்பு பற்றிய செய்தி துளிகள்*

*⭐ஜாக்டோ ஜியோ சார்பாக 22.01.2019 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்க உள்ளது.*

*⭐இது சாதாரண போராட்டம் இல்லை வரலாற்றில் இடம் பிடிக்க போகும் எழுச்சிமிக்க போராட்டம்.*

*⭐போராட்டத்தில் கலந்துகொண்டால் என்னவாகுமோ என்ற ஐயப்பாடுகளை களைந்து அனைவரும் பங்கு பெற வேண்டும் உங்கள் பணிப்பாதுகாப்பு ஜாக்டோ ஜியோ என்ற பேரமைப்பு காக்கும்.*

*_நமக்குரிய பணிப்பாதுகாப்புகள்:_*

*⚡நமது வேலை நிறுத்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது,*

*⚡நமது உரிமைகளைக்காக்க நீதிமன்ற பாதுகாப்பு உள்ளது,*

*⚡வேலை நீக்கம், பணியிடை நீக்கம் 17(A), 17(B) கண்டு அஞ்ச வேண்டியதில்லை,*

*⚡17(A) – நாம் தகவல் தெரிவிக்காமல் பணிக்கு ஏன் வரவில்லை? என்று காரணம் கேட்கும் விளக்க கடிதம் மட்டுமே. இதற்கு பதில் அளிக்க 45 நாட்கள் கால அவகாசம் உண்டு,*

*⚡17(B) – அரசு பணக் கையாடல், இருதார மணம், பாலியல் குற்றச்சாட்டு, கொலைக் குற்றச்சாட்டு, மது போதையில் பணிக்கு வருதல் போன்ற குற்றங்களுக்காக மட்டுமே,*

*⚡இவற்றில் எதை நாம் செய்தோம்? பிறகு ஏன் 17(A), 17(B) கண்டு நாம் அஞ்ச வேண்டும்,*

*⚡TRB, TNPSC, EMPLOYMENT போன்ற முறையான வழியில் பணிநியமனம் பெற்ற நம்மை யாரும் மேற்கண்ட காரணங்களைத் தவிர்த்து DISMISS செய்ய முடியாது,*

*⚡அதிகபட்ச தண்டனை வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதிய பிடித்தம் மட்டுமே (NO WORK NO PAY),*

*⚡நம் முன்னோர்கள் வேலைநிறுத்த நாட்களுக்கு இழந்த ஊதியத்தை பின்னர் பெற்றுள்ளதே வரலாறு. எனவே நாம் வேலை நிறுத்த ஊதியத்தை கண்டிப்பாக பெறுவோம்,*

*⚡நம் முன்னோர்கள் பெற்றுத்தந்த உரிமைகளை நாம் ஒவ்வொன்றாக இழந்து வரும் சூழலில், நாம் போராடவில்லை எனில் பெரிய அளவிலான இழப்பு மட்டுமே மிஞ்சும்,*

*⚡1988 ஆம் ஆண்டு பல நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பலர் சிறை சென்று வீர மரணமடைந்து பெற்றதே மத்திய அரசுக்கு இணையான ஊதியம்,*

*⚡2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் _சரண்டர், அகவிலைப்படி உயர்வு, முழு ஓய்வூதியம் பாதுகாக்கப்பட்டது.*

*⚡2004 – 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுப்பூதிய ஒழிப்பு போராட்டத்தின் விளைவாகவே தொகுப்புமுறை ஊதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் அமுல்படுத்தப்பட்டது.*

*⚡வேலை நியமன தடைச்சட்டம் இரத்து செய்யப்பட்டது.*

*⚡அதன் விளைவாகவே 01.06.2006 க்கு பிறகு TNPSC, TRB, TET போன்ற தேர்வுகள் வழியாக பலரும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் பெற்றார்கள்.*

*⚡2018 தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவே நாம் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் பெற்றோம், புதிய HRA, CCA வைப் பெற்றோம்.*

*⭐வங்கி வேலை நிறுத்தம் பாரீர், அவர்களுடைய ஒற்றுமையைப் பாரீர், எங்காவது வங்கி வேலை நிறுத்தம் அன்று வங்கி செயல்படுவதைக் கண்டுள்ளீர்களா!*

*வீரர்களுக்கு மட்டுமே வரலாற்றில் இடமுண்டு*

*_ஒன்றுபடுவோம்… போராடுவோம்…_*

*_போராடுவோம்… வெற்றிபெறுவோம்…._*

*_இறுதி வெற்றி நமதே…_*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here