போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடப்புத்தகங்களை மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு..

புதுக்கோட்டை,ஜன.21: போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடப்புத்தகங்களை மாணவர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசினார்.

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்வித் தொலைக்காட்சி சார்பில் மௌண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள் மற்றும் நீட் தேர்விற்கான உத்திகள் குறித்த வழிகாட்டல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசியதாவது: அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர்தரமான கல்விபெறுவதற்கு தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது..இது கல்வித்துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சி ஆகும். மேலும் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், நீட் போன்றவற்றில் மாணவர்கள் சாதிப்பதற்கு ஏதுவாக தமிழக பாடத்திட்டங்கள் உயர்தரம் வாய்ந்தவையாக தொகுக்கப்பட்டுள்ளது.எனவே மாணவர்களாகிய நீங்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்களை நன்றாக ஆழ்ந்து படிக்கனும்,புரிந்து படிக்கனும்.அவ்வாறு படித்தால் போட்டித் தேர்வுகளில் நிச்சயமாக சாதிக்கலாம்.இன்றைய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான பதில்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.இவ்வாறாக அகில இந்திய அளவில் பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசால் பள்ளிக்கல்வி பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுவருகின்றன.மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்றால் அதிக கட் ஆப் மதிப்பெண் எடுக்க வேண்டும்..சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் உயரும்.எனவே மாணவர்களாகிய நீங்கள் 500 முதல் 550 வரை மதிப்பெண் எடுக்க வேண்டும்.நானே அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.காரணம் நான் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் 15 மணி நேரம் படித்தேன்.அதே போல் நீங்களும் படித்தால் போட்டித் தேர்வுகளில் சாதிக்கலாம்.போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அறிவு,புத்திசாலித்தனமோ தேவை இல்லை..நல்ல உத்திகளோடு பயிற்சி எடுத்தால் போதும்.போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வகுப்பில் முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்பது கிடையாது.கால அட்டவணை போட்டு படித்தால் கூட போதுமானது.போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இன்றிலிருந்து படித்தால் போதும்.நமது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் நீட் தேர்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது..இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இலவச சீருடைகள்,சைக்கிள்,லேப் டாப் ஆகியவற்றை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் காரணம் தமிழக மாணவர்கள் முதன்மையாக வர வேண்டும் என்பதற்காக தான்.எனவே இங்கு வந்துள்ள அனைவரும் வருங்காலத்தில் மருத்துவர்களாக வரவேண்டும்.அதுவும் நமது மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இடம் பெற வேண்டும் .மருத்துவராக மதிப்பெண்கள் முக்கியம் கிடையாது.அரசுப்பொதுத்தேர்வில் பிளஸ்டூவில் அதிக மதிப்பெண் , குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களும் தன்னம்பிக்கையுடன் கூடிய மனப்பான்மையுடன் சிறப்பான பயிற்சியுடன் கூடிய உழைப்பு இருந்தாலே நீட் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நிச்சயம் இடம் பிடிக்க வாழ்த்துகிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வரவேற்புரையாற்றினார்.
கல்வித் தொலைக்காட்சியின் ஏணிப்படிகள் அறிமுகம் குறித்து மாநில ஓருங்கிணைப்பாளரும் நிகழ்ச்சி மேலாளருமாகிய சி. சதீஷ்குமார் பேசினார்.மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குநர் ஜெய்சன் ஜெயபாரதன் வாழ்த்துரை வழங்கினார்.

நீட் தேர்வில் வெற்றிக்கான வழிகள் குறித்து சீக்கர்ஸ் அகடமி இயக்குநர் சுடர்கொடியும்,நீட் தேர்வின் போது கவனிக்க வேண்டிய உத்திகள் குறித்து பிரெய்ன் புளூம்ஸ் அகடமி இயக்குநர் மகேஷ்வரி ஆகியோர் மாணவர்களிடம் பேசினார்கள்..

பின்னர் மாலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை கல்வி மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர் ( பொறுப்பு) பெ.ராஜ்குமார் வரவேற்றுப் பேசினார்.சிறப்பு விருந்தினராக முன்னாள் சாகித்ய அகடமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்து கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடுனார்.முடிவில் இலுப்பூர் கல்வி மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டகல்வி அலுவலர்கள் இலுப்பூர் க.குணசேகரன்,புதுக்கோட்டை(பொ) ராஜ்குமார்,அறந்தாங்கி(பொ)கு.திராவிடச்செல்வம்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சிவகுமார் உள்ளிட்ட மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டைமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டலுடன் புதுக்கோட்டை,அறந்தாங்கி,இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்கள்,புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,முதுகலையாசிரியர்கள்,கல்வித்தொலைக்காட்சியின் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோரைக்கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here