நாளை சூப்பர்மூன் + முழு சந்திரகிரகணம் .. எங்கெல்லாம் தெரிகிறது?

முழு சந்திரகிரகணமும், சூப்பர் மூன் எனப்படும் ராட்சத நிலவும் நாளைஉலகின் பல்வேறு இடங்களில் தெரியஉள்ளது. இதைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சந்திரகிரகணம் இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவேபூமி ஒரே கோட்டில்வரும்போது, சூரியனின் வெளிச்சத்தை பூமி மறைத்து, பூமியின்நிழலில் நிலவு இருக்கும் குறிப்பிட்ட நேரம்சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. பாதிசந்திரகிரகணத்தை ஆண்டுக்கு இரண்டு முறை பார்க்கலாம். ஆனால், முழு சந்திரகிரகணத்தை காண்பது அரிது. ஆனால், நாளைஉலகின் பல்வேறு இடங்களில், முழு சந்திரகிரகணத்தை மக்கள் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முழு சந்திரகிரகணத்தின் போது, நிலவின் மீது படும்சூரியனின் வெளிச்சத்தை பூமி முற்றிலும்மறைத்துக் கொள்ளும். அதே நேரத்தில், சூரிய வெளிச்சம், பூமியின் வளிமண்டலத்தில் பட்டு திரிந்துநிலவை தொடும். இது நடக்கும்போது, நிலவு ஆரஞ்சு நிறத்தில் தோற்றமளிக்கும்.
இதுபோன்ற முழு சந்திரகிரகணம் காண்பதே அரிது என்ற நிலையில், பூமிக்கு மிக அருகில் நிலவு நகர்கிறது. இதனால், சூப்பர்மூன் எனப்படும் பெரிய தோற்றத்தில் நிலவு காட்சியளிக்கும். சூப்பர்மூனை ஆரஞ்சு நிறத்தில் பார்க்க, பொதுமக்களும், விண்வெளி ஆர்வலர்களும் உலகின் பல்வேறு பகுதிகளில்தயாராகி வருகின்றனர். இந்திய நேரப்படி நாளை காலை 9 மணியளவில் பாதி சந்திர கிரகணம் துவங்கும். 10.11 மணி முதல் சுமார் 62நிமிடங்களுக்கு முழு சந்திரகிரகணத்தைகாண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது, வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தெரியும். ஆசிய நாடுகள், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் சந்திரகிரகணத்தைகாண முடியாது.
அடுத்தமுழு சந்திர கிரகணத்தை2021 மே மாதம் வரை காண முடியாதாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here