*உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு*

22.1.2019 முதல் ஜேக்டோ ஜியோ சார்பாக நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 100% தொடக்க நடுநிலை பள்ளிகள் பூட்டப்பட்டு அங்கு பணிபுரிந்து வரும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்க பள்ளி தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் பங்கு பெற உள்ளனர்.

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் போராட்ட களத்திற்கு வரப் போகிறீர்களா? அல்லது போராட்டத்தை வேடிக்கை பார்க்க போகிறீர்களா?

போராட்டத்தின் விளைவாகவே 8 வது ஊதிய குழு அமல்படுத்தப்பட்டது என்பதையும் அதன் பலனை அனுபவித்தையும் யாரும் மறந்திருக்கமாட்டீர்கள்.

அனைத்து சங்கங்களும் போராட்ட களத்தில் உள்ளது. போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இப்போது போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால்

1. நீங்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினர் இல்லையா?

2. போராடி பெற்ற உரிமைகளை உங்களுக்கு வேண்டியதில்லையா??

3 பள்ளி பணி பாதிக்கும் என்றால் நீங்கள் தான் மாணவர்கள் நலனில் அக்கறை உடையவர்கள். போராடும் நாங்கள் இல்லையா??

4. போராடக் கூடிய எங்களுக்கு பாதிப்பு என்றால் போராடாத நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள் என்றால் அந்த அளவு சுயநலவாதிகளா?? நீங்கள் தான் மாணவர்களுக்கு பொதுநலத்தை போதிப்பவர்களா???

5. போராடக் கூடிய எங்களுக்கு குடும்பம் குழந்தை இல்லையா??

6. CPS திட்டத்தில் உள்ள உங்களுக்காக Gpf திட்டத்தில் உள்ளவர் போராட்டத்தில் பங்கேற்கும் போது cps திட்டத்தில் உள்ள நீங்கள் பணிக்கு செல்வது நியாயமான செயலா? ஓய்வு பெற்றபின் 1 ரூபாய் கொடுக்க யாரும் இல்லை.

7. CPS திட்டத்தில் கட்டிய பணம், நீங்கள் ஓய்வு பெரும் போது திரும்பக் கிடைக்கும் என்ற உத்திரவாதம் உண்டா??

8. 24000 கோடி cps திட்டத்தில் கட்டிய பணம், 4 இலட்சம் கோடி கடனில் உள்ள தமிழக அரசிடம் உள்ளதாம். இதை நம்புகிறீர்களா??

*ஏமாந்தது போதும்*

உங்களுக்கு நீங்களே கேளுங்கள்! உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் போராடாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் என்ற பழிச் சொல்லிற்கு இடம் தராமல்
பள்ளிகளை மூடுவோம்! போராட்ட களத்தில் சங்கமிப்போம்! ஒன்றிணைந்து போராடி கோரிக்கைகளை வெல்வோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாரீர் வாரீர் வாரீர் என உரிமையுடன் அழைப்பது
*ஜேக்டோ ஜியோ உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள்*

*குறிப்பு:* 10,11,12 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு, செய்முறை தேர்வு எல்லாம் உள்ளது. அதை பார்த்தால் நாளை ஓய்வுக்குபின் உன்னை யாரும் பார்க்கமாட்டார்கள். நடுத்தெருவில் நிற்கும் நிலைதான். ஆளும் அரசே மாணவர்கள் மீது அக்கறை இன்றி பேச்சு வார்த்தை நடத்தால் வேடிக்கை பார்க்கும் போது நாம் இந்த கசப்பான முடிவை எடுத்தே ஆக வேண்டும். சனி,ஞாயிறு கூட மாணவர்களுக்கு கற்பிக்க தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here