41 லட்சம் மாணவர்களுக்கு 404 கோடி! – அரசுப் பள்ளிகளின் ஆர்.டி.ஐ. தகவல்கள்
கு.ஆனந்தராஜ்

41 லட்சம் மாணவர்களுக்கு 404 கோடி! – அரசுப் பள்ளிகளின் ஆர்.டி.ஐ. தகவல்கள்
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசினால் செயல்படுத்தப்படும் இலவச சீருடை வழங்கும் திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தோம். அதற்குத் தொடக்கக் கல்வி இயக்கத்தின் பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. அது குறித்த விரிவான விவரங்கள்…

1. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலவச சீருடை பெற்றுப் பயனடைந்த அரசுப் பள்ளி மாணவர்களின் (1 – 8-ம் வகுப்பு வரை படிப்பவர்கள்) விவரங்கள்:

* 2013 – 14: 53.54 லட்சம்
* 2014 – 15: 46.29 லட்சம்
* 2015 – 16: 47.85 லட்சம்
* 2016 – 17: 44.15 லட்சம்
* 2017 – 18: 41.37 லட்சம்

அரசுப் பள்ளி

2. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலவச சீருடை பெற்றுப் பயனடைந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் (1 – 8-ம் வகுப்பு வரை படிப்பவர்கள்) விவரங்கள்:

இந்தக் கேள்விக்கு, மேற்கண்ட அரசுப் பள்ளிகளில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அப்படியே கொடுத்திருக்கிறார்கள்.

3. ஒரு கல்வியாண்டில் ஒரு மாணவருக்கு வழங்கப்படும் சீருடைகளின் எண்ணிக்கை:

4 இணை சீருடைகள்.

அரசுப் பள்ளி – இலவச சீருடை

4. ஒரு மாணவருக்கு வழங்கப்படும் சீருடைக்கான செலவுத் தொகை:

* ஒரு மாணவனுக்கு 4 இணை சீருடைகளுக்கான செலவுத் தொகை : ரூ.936.40 பைசா

* ஒரு மாணவிக்கு 4 இணை சீருடைகளுக்கான செலவுத் தொகை : ரூ.983.56 பைசா

5. இலவசப் பள்ளி சீருடை வழங்கும் திட்டத்துக்காக 1 – 8-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ஆண்டு வாரியான நிதி விவரங்கள்:

ஆர்.டி. ஐ – மாணவர் கேள்விகள்

6. இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தெந்த நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டிருக்கிறது:

டெண்டர் விடும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. இத்திட்டம் தொடர்பாக அனைத்துப் பணிகளும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் வளர்ச்சிப் பணிகள் கழகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

7. இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்காக டெண்டர் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள், எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன:

டெண்டர் விடும் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. இத்திட்டம் தொடர்பாக அனைத்துப் பணிகளும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் வளர்ச்சிப் பணிகள் கழகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here