பள்ளி, கல்லூரி பஸ்களில முதலுதவி பெட்டி கட்டாயம்

திண்டுக்கல்லில் இயங்கும் அரசு, தனியார், பள்ளி மற்றும் கல்லுாரி பஸ்களில் முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டூவீலர் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களிலும் முதலுதவி பெட்டி வைத்திருப்பது போக்குவரத்து விதிகளின் படி கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் முதலுதவி பெட்டி இல்லையெனில், மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும்.

விபத்து ஏற்பட்டால் சிறு காயங்களுக்கு மருந்து போடவும், பெரிய காயங்களுக்கு அவசர சிகிச்சை செய்ய முதலுதவி பெட்டி வைக்கப்படுகின்றன.

முதலுதவி பெட்டி கட்டாயம் டிஞ்சர், பஞ்சு, பிளாஸ்டர், காட்டன் துணி உள்ளிட்ட 10 வகையான பொருட்கள் முதலுதவி பெட்டியில் இருக்கும்.

ஆனால், ஒரு சில வாகனங்களில் முதலுதவி பெட்டி வைத்திருப்பதில்லை. பெட்டி இருந்தாலும் உள்ளே மருந்து பொருட்கள் இருப்பதில்லை.

விபத்து ஏற்படும் போது காயம் ஏற்பட்டுள்ள பயணிகளுக்கு முதலுதவி அளிக்க முடியாமல் 108 க்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

 டூவீலரில் செல்வோர் ெஹல்மெட்அணிய வேண்டும் என்பதை போல் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி பஸ்களில் முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன தணிக்கையின் போது, முதலுதவி பெட்டி இல்லாதது தெரிந்தால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here