>> கிராமசபாவில் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றினால் உங்கள் பகுதி பிரச்சனைகள் தீருமா?

CMCELL மூலமாகவோ, தாசில்தார் அவர்களுக்கு பதிவு தபால் அனுப்பினால் மட்டும் உங்கள் பகுதி பிரச்சனைகள் தீருமா?

 

இல்லை என்பதே பலரின் பதிலாக இருக்கும். ஏனென்றால், அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு அனைவருக்கும் நன்கு தெரியும். பகுதி மக்களால் கிராமசபை தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அதை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பஞ்சாயத்து தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சாரும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், நிறைவேற்ற வைக்க வேண்டிய பொறுப்பு அப்பகுதி மக்களை தான் சாரும்.

சென்ற வருடம் 2018, மே 1 ஆம் தேதி கோவிலம்பாக்கம் கிராமசபையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (இணைத்துள்ள இணைப்பில் Gramasabha Resolution.pdf காணவும்). அடுத்த வந்த ஆகஸ்ட் 15 இல் ஏன் நிறைவேற்றவில்லை என கேட்டால், நாங்கள் கிராமசபையில் கோரும் தீர்மானங்களை புத்தகத்தில் எழுவது மட்டுமே எங்கள் வேலை. அதை நிறைவேற்றுவது எங்கள் பணி அல்ல என மெத்தனமாக BDO கூறினர்.

இதை விடக்கூடாது என மே 1 தீர்மான நகலை பெற்று Petition Processing System மூலம் மாவட்ட ஆட்சியருக்கு Online மூலம் மனு அளித்தோம். அதன் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து நிலத்தடி நீர் எடுத்து விற்க கூடாது என எச்சரிக்கை செய்து, மேலும் நடவடிக்கை எடுக்க தாசில்தார் அவர்களுக்கும், காவல்துறைக்கும் உள்ளது என பதில்(இணைத்துள்ள இணைப்பில் Reply from Collector office for water lorry issue.PDF காணவும்) அளித்து விட்டார். அவர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு இந்த கடிதத்தை அனுப்பவில்லை.

அதன் பிறகு, இவர்களின் பதிலை வைத்து தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சென்று மனு(இணைத்துள்ள இணைப்பில் Thasildhar Letter.jpg காணவும்) அளித்து நடவடிக்கை எடுக்க கோரினோம். பலமுறை கொடுத்த அழுத்தத்தின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து எச்சரிக்கை அளித்தும் நிலத்தடி நீர் எடுத்து விற்பதை நிறுத்தாததால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது CSR (இணைத்துள்ள இணைப்பில் CSR Copy for Illegal water extraction.jpg காணவும்) பதிவு செய்யப்பட்டது.

காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் பதில் என அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தாசில்தார் அவர்கள் நேரில் வந்து ஆணை பிறப்பித்து கிணற்றை மூடினால், இதற்கு நிரந்தர தீர்வு கிடக்கும். இதை பற்றி இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தி (இணைத்துள்ள இணைப்பில் Illeggal water extraction in Kovilambakkam.jpg காணவும்). இத்தனையும் செய்து உள்ளோம். நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கிறார்களா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தாங்களும் தங்கள் பகுதியில் சந்திக்கும் பொது பிரச்சனைகளுக்கு இது போன்று தான் போராட வேண்டி வரும். அதுபோன்று செயல்படுபவர்களுக்கு இதனை மாதிரியாக வைத்து கொள்ளலாம்.

அப்டேட்: 14/01/2019 அன்று மதியம் 2 மணிக்கு, நிலத்தடி நீரை உறிஞ்சும் லாரியை நேரடியாக பிடித்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சோழிங்கநல்லூர் தாசில்தார்… சுண்ணாம்பு கொளத்தூர் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் லாரி பறிமுதல் செய்யபட்டு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது… புகார் அளித்தவர் மீது கிணற்றின் உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தினார்…

களத்தில் எடுக்கப்பட்ட காணொளிப்பதிவு:
https://www.facebook.com/TN.ilayathalaimurai/videos/288877265061412/

நன்றி,
இளையதலைமுறை

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here