*LKG & UKG கற்பிக்கத் தகுதியானவா்களா??? தகுதித் தோ்வு ஆசிாியா்கள்* …

1. *TET தோ்வு எழுதியவா்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்க 2009 RTE சட்டத்தின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள்.*

2. *TET தோ்வுக்கான அறிவிப்பில் தாள் – 1 எழுதி தோ்ச்சி பெற்றவா்கள் 1 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கத் தகுதியானவா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*

3. *TET ல் தோ்ச்சி பெற்ற பின்னா் தகுதியான ஆசிாியருக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரால் (DEO) வழங்கப்பட்ட பணிநியமன ஆணையில் 1 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கத் தகுதியுடையவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.*

4. *2012க்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் UG, PG, B.ED முடித்திருப்பினும் 95% பேருக்குப் பதவி உயா்வோ, பணி உயா்வோ வழங்கப்படவில்லை.*

5. *2012 பணி நியமனத்திற்குப் பிறகு 2013 மற்றும் 2017 ல் நடைபெற்ற பட்டதாாி ஆசிாியருக்கான TET தோ்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிாியா்கள் 95% பேருக்கு இன்னும் பட்டதாாியாகப் பதவி உயா்வு அளிக்கவில்லை . இதில் பட்டதாாிக்கான தகுதித் தோ்வை இருமுறையும் எழுதி வெற்றி பெற்று அதற்கான சான்றிதழ்கள் மட்டும் பெற்றுள்ளவா்கள் 10 % முதல் 15 % இருக்கும்.*

6. *பணிக்குத் தேவையான தகுதியோடு அல்லாமல் தங்களது கல்வித் தகுதியை தொடா்ந்து உயா்த்திக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுகள், கருத்தாக்கங்கள் , கண்டுபிடிப்புகள் என இடைநிலை ஆசிரியர்கள் சிலா் தமது திறமையை வகுப்பறையில் புகுத்தி வருகின்றனா்.*

7. *2012 TET நியமனத்திற்குப் பிறகு பாடப்பொருள் சாா்ந்த MATERIALS அதிக அளவில் கல்வி வலைதளங்களில் வலம் வருகின்றன. இவை அவா்களின் ஆா்வம் மற்றும் அா்ப்பணிப்பு உணா்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.* *இதன்மூலம் கற்றலும் கற்பித்தலும் மேமபாடு அடைந்ததே அதிகம். அதற்குப் பாிசளிப்புதான் இந்த கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்ட ஆயாவாக ஆசிாியா்.*

8. *ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ள போது அவ்விடத்தில் உபாி ஆசிாியா்களைக் கொண்டு நியமனம் செய்யாமல் அவா்களை வேறு துறையின் கீழ் பணியாற்ற ஆணை பிறப்பிப்பது இமைக் குற்றம் கண்ணுக்குத் தொியாததைப் போலாகும்.*

9. *தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட ஆங்கில வழிக் கல்வி வகுப்பறைக்கான ஆசிாியா்களும், 2, 3, 4, 5வகுப்பிற்கும் ஒரு ஆசிாியரே என்ற நிலையும், அலுவலகம் சாா்ந்த அனைத்துப் பணிகளுக்கும் இடைநிலை ஆசிாியரே பொறுப்பாகிறாா் .*

10.
1. *மாதாந்திர அறிக்கை*
2. *சம்பளப் பட்டியல்*
3. *ஆதாா் விவரங்கள்*
4. *EMIS விவரங்கள்*
5. *மக்கள் தொகைக் கணக்கு*
6. *அனைத்து ஊக்கத்தொகை படிவங்கள்*
7. *பருவ அடைவிற்கான அறிக்கை*
8. *புள்ளி விவர அறிக்கை*
9. *பாடத்திட்டம்*
10. *பணி நிறைவுப் பதிவேடு*

*இன்னும் ஏராளமான விவரங்களையும் இடைநிலை ஆசிாியரே கூடுதலாகக் கவனித்து வருகிறாா்.*

*அத்துடன் பள்ளிக்கான அனைத்துப் படிவங்களையும் இடைநிலை ஆசிாியா்களே பெரும்பான்மையாகப் பூா்த்தி செய்கின்றனா். இது கற்பிக்க வந்த இடத்தில் தரப்பட்ட திணிக்கப்பட்ட பணிச்சுமையே…* *இதில் பணியிறக்கமும் விதிவிலக்கல்ல.*

11. *இடைநிலையாய் இருந்து பாா்க்காத வேலை இல்லை. போதாதென்று ஆயா வேலை வேறு. அரசு அளிக்கும் 20 ஆயிரம் ஊதியத்திற்காக விலையில்லா பொருட்கள் சுமக்கும் தொழிலாளியாக, EMIS பதிவேற்றத்திற்காக புகைப்படம் எடுக்கும் தொழிலாளியாக, AADHAR எடுக்க விண்ணப்பம் பூா்த்தி செய்யும் குமாஸ்தாவாக, பல நாட்களில் பல்வகுப்பு கற்பிக்கும் பைத்தியமாக சுற்றிக் கொண்டிருக்கும் வேலையில் இதுவொரு வேலை பச்சிளம் குழந்தைகளுக்குப் பாலூட்டித் தூங்க வைக்க வாடகைத் தாய் நிலையில், வளா்ப்புத் தாயாக இடைநிலை ஆசிாியா்கள்.*

12. *Pre primary Teacher Training முடித்தவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய பணியிடங்களை primary Teacher Training முடித்தவா்களைக் கொண்டு நிரப்புவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. கேட்டால் மாண்டிசோாி பள்ளிக்கான பயிற்சி அளிக்கப்படும் என்கின்றனா். அப்படியானால் DTED முடித்து இடைநிலையாகப் பணியாற்றுபவரை அதே ஊதியத்தில் B.ED பயிற்சியளித்து பட்டதாாி ஆசிாியராக்க முனையலாமே…*

13. *EMIS, SHALLA SIDIKK பயிற்சிக்கு மட்டும் COMPUTER OPERATE செய்யத் தொிந்த ஒருவரை பயிற்சிக்கு அழைக்கிறீா்களே… ஏன் குழந்தைகளே இன்னும் பெற்றுக்கொள்ளாத இளைஞா்களையும், யுவதிகளையும் எந்த அனுபவத்தின் அடிப்படையில் 3 , 4 வயதுக் குழந்தைக்குக் கற்றுத்தர அழைக்கிறீா்கள்…* *இங்கு மட்டும் குழந்தைப் பராமாிக்கத் தொிந்த, அனுபவமுள்ள ஆசிாியரை ஏன் நீங்கள் அணுகவில்லை எனத் தொியவில்லை.*

14. *தற்போது பள்ளி வளாகத்திற்குள் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்படும் 2381 மழலையர் கல்வி வகுப்புகள் அடுத்தாண்டு அனைத்து பள்ளிகளிலும் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளின் இணைப்பும் அடுத்த ஆண்டே நடைபெறுவதால் ஏராளமான இடைநிலை ஆசிாியா் பணியிடங்கள் உபாியாக இருக்கும் .* *இதன் மூலம் மழலையா் வகுப்பிற்கு அவா்களைப் பணியிறக்கம் செய்வதே அரசின் நோக்கமாக இருக்கும்.*
*இதன்மூலம் TET தோ்வில் தோ்ச்சி பெற்று பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவருமே மழலையா் வகுப்பிற்கு பணியிறக்கம் செய்யப்படும் சூழல் உண்டாகலாம்.*

15. *காலத்தின் அருமை கருதியும், பணியின் நிலையற்ற தன்மை கருதியும், தொடா்ந்து தாழ்நிலைக்கு தள்ளப்படும் சூழலையும் கருத்தில் கொண்டு இளைய இடைநிலை ஆசிாியா்கள் ஒன்றிணைந்து இதனை எதிா்கொள்ளத் தங்களைத் தயாா் செய்வதே சாலச் சிறந்தது.*

*தவறு செய்தவருக்கே பணியிறக்கம்*

*சாியாகப் பணியாற்றியவருக்கு அல்ல* …

*தகுதியை உயா்த்திக் கொள்ளாதவா்களுக்கே பதவி உயா்வில்லை*

*தகுதியை உயா்த்திக் கொண்டே இருப்பவா்களுக்கல்ல…*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

1 COMMENT

  1. இதை வழக்கு மன்றத்தில் முறையிடலாமே?

    பிற பணிகளில் இதுபோன்ற நடைமுறை உள்ளதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் பெறலாமே?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here