• மேஷம்
  மேஷம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
 • ரிஷபம்
  ரிஷபம்: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.   
 • மிதுனம்
  மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள் வீடு,வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்புக் கூடும் நாள்.
 • கடகம்
  கடகம்: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். 
 • சிம்மம்
  சிம்மம்: காலை 9 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழையபிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.
 • கன்னி
  கன்னி: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். சிலரின் தவறை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்  கொள்ளுங்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள். 
 • துலாம்
  துலாம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்தசகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.  
 • விருச்சிகம்
  விருச்சிகம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
 • தனுசு
  தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள். 
 • மகரம்
  மகரம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயாருடன் மனத்தாங்கல் வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப் பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 • கும்பம்
  கும்பம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள். 
 • மீனம்
  மீனம்: காலை 9 மணி முதல் மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here