வாட்ஸாப்ப், அதன் பயனர்களின் அரட்டைகளை மற்றவர்கள் பார்க்காதபடி பாதுகாப்பதற்காக கைரேகை அம்சத்தை (Fingerprint authentication) கொண்டு வர போகிறது. தற்போது அதற்கான சோதனை பணி நடைபெறுகிறது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் பயன்பாட்டைத் திறக்கவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸாப்ப் சமீபத்தில் ஐபோனில் இத்தகைய அம்சத்தை வெளியிடுவதாக அறிவித்தது, அதற்குள் அதே போன்று ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்க்கான வாட்ஸாப்பிற்கும் இந்த அம்சத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மெசேஜ்களை படிக்க உரிமையாளரின் கைவிரல் ரேகை தேவைப்படும்.

மேலும் WABetaInfo வெளிட்ட தகவலின்படி, ஐபோனில் இதனை தவிர்த்து மேலும் இரண்டு பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் (authentication) முறை உள்ளன. அவை முகத்தை வைத்து அன்லாக் செய்யும் முறை (Face ID) மற்றும் விரலால் தொட்டு அன்லாக் செய்யும் முறை (Touch ID). ஆனால் இவ்விரண்டும் தற்போது சோதனையில் தான் உள்ளன. விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பயனாளிகளின் தனிபட்ட அல்லது முக்கியமான மெசேஜ்களை பாதுகாக்க முடியும் என வாட்ஸாப்ப் நிறுவனம் கூறுவதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸாப்பில் கைவிரல் ரேகையை இயக்குவது எப்படி

வாட்ஸாப்பின் கைவிரல் ரேகை அம்சத்தை இயக்குவதற்கு முதலில் வாட்சப்பின் Settings பகுதிக்கு செல்லவும். அடுத்து இதில் உள்ள Account என்பதனை கிளிக் செய்து, அதன் பின்னர் இதில் Privacy என்பதனை கிளிக் செய்யவும்.

பின் இதில் இறுதியாக உள்ள Authentication என்ற பிரிவில் Fingerprint என்ற ஆப்ஷனை காண்பீர்கள், இதனை enable செய்துக் கொள்ளவும்.

நீங்கள் கைரேகை அம்சத்தை இயக்கியதும், உங்களின் தகவல்கள் முழுவதுமாக மற்றவர்களிடமிருந்து பாதுகாக்கப்படும். நிச்சயமாக, உங்களின் வாட்ஸாப்ப் ஏற்கெனவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், இதுவும் கண்டிப்பாக உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here