நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்துவர். தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது.. 

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில… 

காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்

இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது. 

இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார். 

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும்.

அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.

எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அரு‌‌கில் கூட வராது.

பழைய சாதம் செய்வது எப்படி?

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது “ப்ரௌன் ரைஸ்” என்று அழைக்கப்படும் “கைக்குத்தல்” அரிசி தான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்து குடிக்க ஜில்லென்று இருக்கும். மதிய உணவு நேரம் வரை டீ, காபி எதுவும் தேவையில்லை. ஆதலால் பழைய சாதம் சாப்‌பிடலா‌ம், ஆரோக்கியமாக இருக்கலாம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here