இன்று பெரும்பாலானோர் கணினியை விட்டுவிட்டு தனது அனைத்து வேலைகளையும் தங்களின் மொபைல் போன்களிலேயே செய்கின்றனர், அந்த அளவிற்கு மொபைல் போன்களின் தாக்கம் மக்களிடம் அதிகமாக உள்ளது. கணினியை பயன்படுத்துபவர்களுக்கு தெரியும் வைரஸ்களினால் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை குறித்து, எனினும் வைரஸ்களினால் ஆகும் பாதிப்பினை தடுக்க பல ஆன்டிவைரஸ் உள்ளன. இதைப் போன்று தான் ஸ்மார்ட் போன்களுக்கும் ஆன்டிவைரஸ் ஆப்கள் பல இருக்கின்றன.

குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தினை கொண்ட மொபைல்களுடன் ஒப்பிடுகையில் ஐஓஎஸ் இயங்கு தளத்தினை கொண்ட மொபைல்கள் சற்று பாதுகாப்பானவை என்ற எண்ணம் பரவலாக உள்ளது. எனினும் அச்சுறுத்தும் தன்மை கொண்ட வைரஸ்கள் இதுவரை ஆண்ட்ராய்டில் கண்டுபிடிக்கப்படவில்லை.

மொபைல் போன்களை வைரஸ்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி

  • கூடிய மட்டும் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பிக்கையான தளங்களிலிருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பொதுவாக ப்ளே ஸ்டோரில் இருக்காது, அவ்வாறு அவை இருந்தாலும் அவை உடனடியாக கூகிளால் நீக்கப்பட்டுவிடும்.

  • அடுத்து கூகுள் ப்ளேவும் தற்போது Play Protect என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யும் செயலிகளை ஸ்கேன் செய்து பாதுகாப்பானதா என்பதனை உறுதிச் செய்யும்.
  • செயலிகளை நீங்கள் இன்ஸ்டால் போது அது என்ன என்ன அனுமதிகளைக் கேட்கிறது என்பதனை கவனித்து அதன் பின் அனுமதி கொடுங்கள்.
  • இணைய தளத்தை பயன்படுத்தும் போது அல்லது உங்களின் மெயிலை செக் செய்யும் போது சந்தேகத்திற்குரிய லிங்குகள் காண்பிக்கப்பட்டால் தயவு செய்து கிளிக் செய்து விடாதீர்கள், ஏனென்றால் பெரும்பாலான வைரஸ்கள் இதன் வழியாகவே உங்கள் மொபைல் போனில் உள் நுழைகின்றன.

  • உங்கள் மொபைல் போனில் புதிய ஓ.எஸ்கான அப்டேட் வந்து இருந்தால், உடனே அப்டேட் செய்து விடுங்கள். ஏனெனில் பழைய ஓ.எஸ்களை காட்டிலும் புது ஓ.எஸ்களில் செக்யூரிட்டி சம்பந்தமான அப்டேட்கள் அதிகமாக இருக்கும்.
  • Free Wi-Fi கிடைக்கிறது என்று சொல்லி, உங்களுக்கு தெரியாத ஓபன் Wi-Fi களை பயன்படுத்தாதீர்கள், இதன் மூலம் இந்த நெட்ஒர்க்களைப் பயன்படுத்தி நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியும். மேலும் இது உங்களை பல ஆபத்தான விஷயங்களுக்கு அழைத்து செல்லும்.
  • இவற்றிக்கு எல்லாம் மேலாக ஆன்டி வைரஸ் என்ற பசுந்தோலை போர்த்திப் பல ஆபத்து நிறைந்த ஆப்கள் இணையத்தில் ஏராளம் உள்ளன. உங்கள் மொபைல் ஆபத்தில் உள்ளது உடனே இந்த ஆப்பினை இன்ஸ்டால் செய்து உங்கள் மொபைலை காப்பாற்றி கொள்ளுங்கள் என்ற விளம்பரங்கள் பல தோன்றும், இவற்றை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். இவை எல்லாம் உங்கள் மொபைல் போனுக்கு கடுமையான தீங்கினை விளைவிக்கும்.

இவ்வளவு பாதுகாப்பு அம்சங்களை நீங்கள் கருத்தில் கொண்டாலே போதுமானது, உங்களுக்கு ஆன்டிவைரஸ் ஆப்கள் தேவையில்லை.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here