*ஊதிய முரண்பாட்டு பிரச்சனையிலிருந்து திசை திருப்பி இடைநிலை ஆசிரியர்களை வேறொரு பிரச்சனைக்குள் கவனம் செலுத்த வைக்கும் கல்வி செயலாளரின் தந்திரம்..*

*இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு கடுமையா ஊதிய முரண்பாட்டு ஏற்பட்டு இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் 6* *நாட்கள் மிக தீவிரமான போட்டத்தை நடத்தி அரசியல் தலைவர்களுக்கும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும்* *தங்களுக்கு ஏற்பட்டு இருக்கிற அநீதியை சுட்டிக்காண்பித்தார்கள்.*
*அவர்களின் ஊதிய முரண்பாட்டு கோரிக்கை 100 சதவீதம் நியாயமானது.*
*ஒரே ஒரு நாள் பணிநியமன இடைவெளியில் தன்னுடன்* *பணிப்புரியும் சக ஆசிரியரை விட ரூபாய் 10 ஆயிரத்துக்கும் மேல் வித்தியாசப்படுவதாக புலம்பி வருகிறார்கள்.*
*அரசும் இவர்களது கோரிக்கை சரி தான் ஒப்புக்கொண்டு இந்த பிரச்சனையை* *சரிசெய்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறது.*
*இடைநிலை ஆசிரியர்கள் ஒவ்வொரு முறை போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்கும்* *போதும் ஒரு நபர் ஊதிய குழுவை காட்டி தப்பித்துக்கொண்ட அரசு தற்போது ஒரு நபர் குழு அரசிடம்* *சமர்பிக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் ஊதிய பிரச்சனையை சரிசெய்யாமல்* *அங்கன்வாடி பள்ளிகளுக்கு அவர்களை மடைமாற்றி ஊதிய பிரச்சனையை மழுங்கடித்து* *அங்கன்வாடி பள்ளிகளுக்கு போவதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று அவர்கள் சிந்திக்கும் அளவுக்கு* *பிரச்சனையை திசை திருப்பி இருப்பது பெருத்த சந்தேகத்தை உண்டாக்குகிறது..*
*பொதுவாக எந்தவொரு துறையிலும் பணிநியமனம் பெற்ற அரசு ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு பணி உயர்வு பெறுவதே நடைமுறை.மாறாக* *இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் நிலையிலிருந்து கீழிறங்கி பதவி இறக்கம் பெற்று பணிப்புரிய வேண்டிய நிலைக்கு தள்ளிட்ட அரசின் செயல் கேவலத்திலும் கேவலம்.*
*ஊதிய பிரச்சனை சரி தான் என ஒப்புக்கொண்ட பிறகு அதை சரி செய்வதே நியாயமானதாக இருக்கும்,நிதி* *இல்லையென்றால் இப்போது அவர்கள் கேட்கும் சம ஊதிய அரசாணையை பிறப்பித்து விட்டு இரண்டொரு மாதங்கள் பொறுக்கச்சொல்வதே சரியானதாக* *இருக்கும்.அதை விடுத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அவர்கள் கற்பிக்க வேண்டிய 1 முதல் 5* *நிலையிலிருந்து கீழிறக்குவது ஏற்றுக்கொள்ள முடியாததது…*
*இது முழுக்க முழுக்க கல்விச்செயலாளரின் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது..*
*அவரின் இந்த தந்திர புத்திக்கு இடம் கொடுத்து* *கல்வித்துறையின் முதல்வராக செங்கோல் ஏந்தி புரட்சிகளை செய்து வந்த மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும்* *தனக்கென்ற இருந்த செல்வாக்கையும் நன்மதிப்பையும் இதன் மூலம்* *குறைத்துக்கொள்வார் என்றே தெரிகிறது…*
*அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவிற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எப்படி காரணமாவார்கள்???*
*அரசு ஊருக்கு நான்கைந்து தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து விட்டு தற்போது பள்ளிகளை* *இணைக்கப்போகிறோம்,அங்கன்வாடிப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை அனுப்பப்போகிறோம் என்று சொல்வதெல்லாம் எந்தவகையிலும்* *நியாயப்படுத்த முடியாது.எனவே இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டு பிரச்சனையை சரிசெய்வதோடு,அங்கன்வாடி பள்ளிகளுக்கு மாண்டிச்சோரி சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை புதியதாக நியமிப்பதே தீர்வாக இருக்க முடியும்…*
*கல்வித்துறை செயலரும் அமைச்சரும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளா விட்டால் விளைவுகள் வேறு மாதிரியாக இவர்கள் சந்திகலாம்..*

*வினவு இணையதளம்.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here