அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு இனி கற்பித்தல் பணி இல்லை

‘எல்.கே.ஜி., – யு.கே.ஜி., துவங்கப்படும், 2,382 அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் இனி கற்பித்தல் பணியை மேற்கொள்ள தேவையில்லை’ என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

அங்கன்வாடி மையங்களில், ஆறு மாதம் முதல், 3 வயதுடைய குழந்தைகளுக்கு உரையாடுதல் பயிற்சியும், 3 முதல், 6 வயது குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியும் அளிக்கப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 2,382 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு, பெண் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், அங்கன்வாடி மைய ஊழியர்களை முப்பருவ கல்வியை கற்பிக்க வேண்டாம் என்றும், அவர்கள் கலவை சாதம், சத்து மாவு வழங்குதல், வளரிளம் பெண்களுக்கான திட்டத்தை செயல்படுத்துதல் போன்ற பணிகளை மட்டும் மேற்கொண்டால் போதும் என, தெரிவிக்கப் பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:எல்.கே.ஜி.,- யு.கே.ஜி., வகுப்புகள், 18ல் துவங்க உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கல்வி கற்பிக்கும் பணி மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்வர். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பணி ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here