அறிவியல்-அறிவோம்: சளி பிடிப்பது ஏன்?காரணம் அறிவோம்

(S.Harinarayanan.)
சளி எப்படி உருவாகிறது?
மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய இடங்களில் ‘கோழைப் படலம்’ (Mucus membrane) என்ற அமைப்பு இருக்கிறது. இது ‘மியூசின்’ (Mucin) எனும் திரவத்தைச் சுரக்கிறது. சாதாரணமாகப் பார்ப்பதற்கு இது பளிங்கு மாதிரி இருக்கும்; பிசின் மாதிரி ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. சுவாசப் பாதை வறண்டுவிடாமல் இருக்க இதுவே உதவுகிறது. காற்றில் கலந்து வரும் தூசு, கிருமிகள் போன்றவை இதில் ஒட்டிக்கொள்வதால், காற்று சுத்தமாகி நுரையீரலுக்குள் செல்கிறது. இப்படி, நம்முடைய இயல்பான சுவாசத்துக்கு இது தேவைப்படுகிறது.
காற்றில் வரும் தூசும் கிருமிகளும் மிக அதிக அளவில் இருந்தால், மியூசின் சுரப்பும் அதிகரிக்கும். இது மட்டுமல்லாமல், சில வகைக் கிருமிகளோடு போராடும் குணமும் மியூசினுக்கு உண்டு. இந்தப் போராட்டத்தில் கிருமிகள் பல இறக்கும்; பழைய கோழைப்படலமும் அழியும். அப்போது தூசு, இறந்துபோன கிருமிகள், அழிந்து போன கோழைப்படலச் செல்கள் எல்லாமே மியூசின் திரவத்தில் கலந்து ‘சளி’யாக (Sputum) மாறும்.
பளிங்குபோல் இருக்க வேண்டிய மியூசின் திரவம் சளியாக மாறியதும் பழுப்பாகவோ, மஞ்சளாகவோ காணப்படும். கோழைப்படலத்தைப் பாதிக்கும் கிருமியைப் பொறுத்துச் சளியின் நிறம் பச்சை, சிவப்பு எனப் பல நிறங்களில் இருக்கலாம். கிருமிகளின் பாதிப்பு மூக்கில் இருந்தால், மூக்குச் சளி: தொண்டையில் பாதிப்பு இருந்தால், தொண்டைச் சளி; நுரையீரலில் பாதிப்பு என்றால், நெஞ்சுச் சளி என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.
நம் உடலில் வியர்வை என்பது எப்படி ஒரு கழிவுப்பொருளோ, அதைப் போலத்தான் சளியும் ஒரு கழிவுப் பொருள். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் மனிதனின் உடல் சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நமது வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை, குடல் ஆகியவற்றில், ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்துள்ளன. மேலும் பாதுகாப்பு கவசம் போலவும் செயல்படுகின்றன.
சளியில் பாக்டீரியா வைரஸ்களை, நம் உடல் கண்டு கொள்வதற்காக ஆன்டிபயாடிக், நொதிகள், புரதங்கள், பல்வேறு உயிரணுக்கள் நிறைந்து இருக்கின்றன. இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களை ஜீரணம் செய்யும் சக்தி நமது உடலுக்கு உண்டு. ஆனால் ரசாயனப் பொருட்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, உடல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் வேளையில் தான், அது சளியாக உருமாறுகிறது.
அதாவது உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ, அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாக வெளியேறவேண்டும். ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே தக்க வைத்துக்கொள்கிறோம். இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது.
இரண்டு முறைகளில் சளி ஏற்படுகிறது, அவையாவன
1.உடல் சூட்டால் உண்டாகும் சளி:
 உடல் சூட்டால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, இது தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும். அப்போது வறட்டு இருமல் ஏற்படும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகத் தான் வெளியேற்ற வேண்டும்.
2.குளிர்ச்சியால் ஏற்படும் சளி:
உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது உருவாகும் சளி, பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும். இவ்வாறு உருவாகும் சளியை உடனே வெளியேற்ற வேண்டுமே தவிர, எந்த வித மருந்துகளும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெய்யை மார்மீதும், முதுகுப்புறமும் தடவ சளி, இருமல் குறையும்.
சிறு குழந்தைகளுக்கு, சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும் போது, சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு, உப்பு கலந்த சுடுநீரை தொட்டுத் துடைத்தால், மூக்கடைப்பு நீங்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here