புதுக்கோட்டையில் உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கையாள பயிற்சி.
புதுக்கோட்டை,ஜன.8: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு,அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறைமை அமுல்படுத்துதல் சார்பான பயிற்சி அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் ஒரு பள்ளிக்கு 2 உபகரணம் வீதம் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள 216 பள்ளிகளுக்கு 432 உபகரணங்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.
இப்பயிற்சியில் புதுக்கோட்டை,இலுப்பூர்,அறந்தாங்கி கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைஆசிரியர்கள் மற்றும் கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சியானது ஒவ்வோர் கல்வி மாவட்டத்திற்கும் தனித் தனியே நடைபெற்றது.பயிற்சியின் கருத்தாளர்களாக மாநில அளவில் பயிற்சி பெற்ற கணினி ஆசிரியர்கள் இலுப்பூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல்,செந்தில்,கார்த்திகேயனும்,அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்,செல்வம்,கார்த்திகேயன்,சுரேஷ்,களப்பையா ஆகியோரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன்,மகேஷ்வரன்,ஜீவானந்தம் ஆகியோரும் செயல்பட்டனர்.