மதுரையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் கல்வித்துறை சார்பில் நேற்று மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த இம்முகாமை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி துவக்கி வைத்தார். மேலுார் டி.இ.ஓ., மீனாவதி, நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி மற்றும் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்

பொது தேர்வு எழுதவுள்ள 289 பள்ளிகளில் இருந்து பாடங்கள் வாரியாக தேர்வு செய்யப்பட்ட (ரேண்டம்) 3928 விடைத்தாள்களை 20 குழுக்களை சேர்ந்த 180 ஆசிரியர்கள் மறுஆய்வு செய்தனர். ஒரு மதிப்பெண் பகுதி உட்பட அதிக மதிப்பெண் பெற்ற பள்ளிகள், குறைந்த மதிப்பெண் பெற்ற பள்ளிகள் விவரம் சேகரிக்கப்பட்டது  சுபாஷினி கூறுகையில், “கலெக்டர் நடராஜன் உத்தரவுப்படி காலாண்டை தொடர்ந்து அரையாண்டு தேர்வு விடைத்தாள்களும் மறுஆய்வு செய்யப்பட்டது. ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டதில் அதிக மதிப்பெண் வித்தியாசம் இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து விசாரிக்கப்படும்” என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here