மாணவர்களின் உடல்நலன் கருதி வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ முறைக்கு ஒரே புத்தகம் வழங்குவதை மறுபரிசீலனை செய்திடுக – தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

மீண்டும் பழையமுறையால் மாணவர்கள் பொதி சுமக்கும் நிலைக்கு ஆளாவார்கள். புதிய பாடநூற்கள் அதிக பக்கங்கள் உள்ள நிலையில் முதுகுதண்டுவடம் பாதிக்கும் நிலை உருவானதால்தான் பொதிசுமக்கும் நிலையினை மாற்றி முப்பருவமுறை கொண்டுவரப்பட்டது.

உதாரணமாக ஒன்பதாம் வகுப்பு ஒரு பாடப்புத்தகம் 500 பக்கங்கள் மேல் என்றால் 5 பாடபுத்தகங்கள் உடன் நோட்டுகள் இவற்றை புத்தகப்பையுடன் சுமந்துசெல்லும்போது குழந்தைகளின் உடல்நலத்தைக்கருதி மூன்று பருவங்களாகப் பிரித்து புத்தகச்சுமை குறைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு முறையை (CCE) நீக்கிவிட்டு பத்தாம் வகுப்பைப் போல 100 மதிப்பெண்கள் தேர்வு நடத்த முயல்வது எதிர்காலத்தில் குழந்தைகளை முடமாக்கும் முயற்சி

11, 12 வகுப்புகளைப் போல அகமதிப்பீட்டு முறை 9, 10 வகுப்புகளுக்கும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என மூன்று தொகுதிகளாக பாடநூல்கள் வழங்கிட மாணவர்கள் நலன்கருதி பரிசீலனை செய்திடவேண்டும். மாற்றங்களை நோக்கி கல்வித்துறை சென்றுகொண்டிருக்கும் நிலையில் கல்வித்துறை மீண்டும் பின்னோக்கி செல்வதில் வருத்தமளிக்கிறது..தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here