பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும்:போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

*அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரைவில்‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்

*தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி பயின்றிட ஏதுவாக, அரசின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது

*இந்த ஆண்டு இலவச பேருந்து பயண அட்டை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்கப்படும்

*சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 1,791 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன

*இதுவரையில், 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கும் பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும்

*அதுவரையில் பள்ளி மாணவர்கள் சீருடையிலும், கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்லூரி அடையாள அட்டை மூலம் பேருந்தில் பயணம் செய்திட அனுமதிக்குமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here