திருக்குறள்

அதிகாரம்:அடக்கம் உடைமை

திருக்குறள்:130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

விளக்கம்:

கல்வி கற்று, மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

பழமொழி

We live in deeds, not in years

எத்தனை நாள் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பது மேல்

இரண்டொழுக்க பண்புகள்

*புது வருடம் மற்றும் புது பருவத்தில் எல்லோரும் போற்றும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இருக்கும் வகையில் நடப்பேன்.

*நான் வாழும் பகுதி மற்றும் சுற்றுப்புறம்  பசுமை சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பைகள் தவிர்த்து துணிப்பைகள் மற்றும் பாத்திரம் உபயோகிப்பேன்.

பொன்மொழி

சிந்தனையைவிட செயலால்தான் எல்லோரையும் மாற்றி அமைக்க முடியும்.

   – வில்லியம் வேர்ஸ்ட்வொர்த்

  பொது அறிவு

1.திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

 ஜி .யு .போப்

2. உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் எந்த நாட்டில் உள்ளது?

 இத்தாலி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கருணைக்கிழங்கு

1. சாதாரணமாக சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். ஜீரண சக்தியை துரிதப்படுத்தும்; ஜீரண உறுப்புகளுக்கு பலத்தையும் கொடுக்கும்.

2. உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. மலச்சிக்கலையும் போக்கும். நாள்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.

3.பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நோய்களில், வெள்ளைப்பாடு என்ற நோய்க்கு, கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்த கிழங்கு. உடல் வலி இருந்தால் கூட, போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

English words and Meaning

Doze       அரை தூக்கம்
Disgust.  வெறுப்பு
Discuss.  விவாதித்தல்
Dry.          உலர்த்து
Dual.         இரட்டை

அறிவியல் விந்தைகள்

இலுப்பை மரம் –

* இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல். இது சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.

* இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம்.

“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை” என்பது பழமொழி.

* ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம்.

* உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

*ஒரு கண அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது . அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.

* வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.

* இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.

* வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.

கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.

இலுப்பையை அழிவிலிருந்து மீட்போம்,

சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்…..

Some important abbreviations for students

AM     –    Anti Meridian (Before Noon)

PM     –    Post Meridian

நீதிக்கதை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.

சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

இன்றைய செய்திகள்
05.01.2019

* 10 ஆண்டுகளுக்கு பின் குளிர் பிரதேசமாக மாறிய தமிழக நகரங்கள்; எலும்பை ஊடுறுவும் உறைபனியால் நடுங்கும் மக்கள்.

*  சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த ’42 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சிஏ திறந்தவெளி விளையாட்டரங்கில்  ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் கண்காட்சி நடக்கிறது.

* உயர்கல்வி மன்ற துணை தலைவராக மயில்சாமி நியமனம்.

* இந்திய அணி 622 ரன்களில் ‘டிக்ளேர்’ செய்தது. ரிஷப் பந்த் 159*, புஜாரா 193 ரன்கள் குவித்தனர்.

* ஐரோப்பிய அரங்கில் தரப்படும் ‘குளோப் கால்பந்து’ விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ சாதனையாக மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

Today’s Headlines

* Tamilnadu towns are became cold after 10 years; People who shake the bone and tremble with frost.

* Book Fair, one of the landmarks of Chennai City, started. The exhibition will be held from 4th to 20th November at the YMCA Open Sports Stadium in Chennai Nandanam.

* Mr. Mayilasamy appointed as Vice Chairperson of Higher Education.

* India made a  declare of 622 runs. Rishabh Pant 159 and Pujara scored 193 runs.

* Christiano Ronaldo has won the ‘Globe Football’ award at the European venue for the third time as a hat-trick record.

Prepared by
Covai women ICT_போதிமரம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here