+2 படிப்பில் முக்கியபாடங்களுக்கு 2புத்தகங்களுக்கு பதிலாகஒரே புத்தகத்தைஅறிமுகப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.இயற்பியல், வேதியியல்,உயிரியல், பொருளியல்,கணக்கு பதிவியல்பாடங்களுக்கு இனி ஒரேபுத்தகம் பயன்படுத்தப்படும்என பள்ளிக்கல்வித்துறைதகவல் தெரிவித்துள்ளது.வரும் கல்வியாண்டில்புதிய பாடத்துடன் ஒரேபுத்தகமாக வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது.கடந்தண்டு 11ம் வகுப்புமாணவர்களுக்குஅறிமுகப்படுத்தப்பட்ட புதியபாடத்திட்டத்தின் படி,அனைத்து பாடத்திற்கும் 2புத்தகங்கள்வழங்கப்பட்டிருந்தன.முக்கியமாக இயற்பியல்,வேதியியல், கணிதம்,கணக்கு பதிவியல் ஆகியபாடத்திட்டங்களுக்கு 2புத்தகங்கள்அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த புதியபாடத்திட்டத்தின்காரணமாக 11ம் வகுப்புமாணவர்களிடையே படிப்புசுமை அதிகரிப்பதுமட்டுமின்றி மனஅழுத்தம்ஏற்படுத்துவதாகமாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் தரப்பில்கூறப்பட்டது.

 

இதன் காரணமாக, வரும்கல்வியாண்டில்அறிமுகப்படுபடக் கூடியபாடத்திட்டத்தில் ஒரேபுத்தகம் மட்டும் வழங்கும்முயற்சியில்பள்ளிக்கல்வித்துறைஈடுபட்டு வருவதாகதெரியவந்துள்ளது.இதுகுறித்து, பாடத்திட்டகுழுவிற்கும்அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்அடிப்படையில் ஏற்கனவேஉள்ள பழையபாடத்திட்டத்தின் படி, 2புத்தகங்களாகஇருக்கக்கூடிய 12ம் வகுப்புவேதியியல், கணிதம்,இயற்பியல், கணக்குபதிவியல் பாடங்களுக்குஒரு பாட புத்தகங்களைவழங்குவதற்கானநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த புதியபாடத்திட்டத்தின் இறுதிவடிவம் ஏப்ரல் மாதத்தில்முடிய உள்ளதாகவும், அதன்பிறகு அச்சடிப்பிற்குசெல்லும் என்றும் தகவல்கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here