கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இருக்கின்றனர். நேற்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

உண்ணாவிரத போராட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், 
அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 
ஆகியோர் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த நிலையில், நாம் 
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் 
நேற்று நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இதுமட்டுமில்லாமல் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, 
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், மனிதநேய 
மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரும் 
ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை 
அனுப்பி இருக்கின்றனர்.
தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 
ஆசிரியர்களில் பலர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் 
சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பத்துடன் வந்திருந்த 
ஆசிரியர்களின் பிள்ளைகளும் நேற்று கோரிக்கையை 
வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியது அவர்களுக்கு மேலும் 
வலுவூட்டும் விதமாக அமைந்தது.
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் குறித்து 
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு 
குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:-
நாங்கள் புதிதாக எந்த கோரிக்கையையும் முன்வைத்து 
கேட்கவில்லை. ஏற்கனவே முன்வைத்த கோரிக்கையின்படி 
செய்து கொடுப்பதாக எழுதி கொடுத்ததை நிறைவேற்றுங்கள் 
என்று தான் கேட்கிறோம். நாங்கள் இந்த போராட்டத்தில்
 இருந்து வெறுங்கையோடு வீடு திரும்ப முடியாது.
முதல்-அமைச்சர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். 
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களுடைய 
போராட்டம் தொடரும். அதில் திட்டவட்டமாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here