சென்னையை நோக்கி படையெடுக்கும் இடைநிலை ஆசிரியர்கள்!!

2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்து
நடத்தி வருகின்றனர்.

பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான ஊதியத்தை இழந்து வாடும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உயிர் நீர் அருந்தா போராட்டத்தை வெற்றி பெற செய்யும் வகையில் விடுமுறைக்கு ஊருக்கு சென்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள முடிவு செய்து சென்னை நோக்கி பயணித்து கொண்டுள்ளனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் அவர்கள் 2009&TET இடைநிலை ஆசிரியர்கள்
உடனடியாக சென்னை வந்து போராட்டம் வெற்றி பெறும் வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு இன்னும் 4000 ஆசிரியர்கள் வருவார்கள் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here