நமது குழந்தைகள் அனைவருமே விடுமுறை நாட்களை உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் எதிர்கொள்வார்கள். தினசரி பள்ளிக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் சென்று வந்து விட்டு, வீட்டுப்பாடம் மற்றும் பரீட்சைகளுக்குத் தயாராகும் அந்த வாழ்க்கை அவர்களை மிகவும் சோர்வடையச் செய்திருக்கும். அதனால் தான் குழந்தைகள் எந்தவித தடைகளும் இல்லாமல் விளையாடும் காலமாக விடுமுறைக் காலம் உள்ளது. ஆனால், விடுமுறைக் காலத்தை விளையாடியும், ஊர் சுற்றியும் வீணடிக்கத் தேவையில்லை. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கத்துடனும், அவர்களுடைய மனதை பயனுள்ள வகையில் பயன்படுத்துமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெறுமனே டிவி பார்ப்பதிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் விடுமுறைகளை கழிப்பதில் யாருக்கும் பயனில்லை. அதே சமயம், டியூசன் மற்றும் பொழுதுபோக்கு வகுப்புகள் என போரடிக்கவும் கூடாது. உங்கள் குழந்தையின் விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக மாற்றும் சில விஷயங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.
நீச்சல் – குழந்தைகளுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். விடுமுறையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் அருமையான உடற்பயிற்சிகளில் ஒன்று தான் நீச்சல். விடுமுறைகளில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தரும் வகுப்புகள் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மிகவும் கடுமையான ஆனால் சிறந்த உடற்பயிற்சியாக நீச்சல் உள்ளது.
கலை மற்றும் நுண்கலை – குழந்தைகளின் மனதை விசாலப்படுத்தும் விஷயமாக கலை மற்றும் நுண்கலைகள் உள்ளன. குழந்தைகளின் கற்பனைத் திறன் மற்றும் சிந்தனைத் திறன்களை திறக்கும் கதவுகளாக இந்த வகுப்புகள் உள்ளன. ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு வகையான பெயிண்டிங், ஓரிகாமி போன்றவை இந்த நுண்கலைகளில் அடங்கும்.
நடனம் – உங்கள் குழந்தைகள் சற்றே வளர்ந்தவர்களாக இருந்தால், இது அவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்க வேண்டிய விடுமுறையாக இருக்கட்டும். நடனம் அவர்களை புத்துணர்வுடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும். மேலும் அவர்களுக்கு ஒழுங்கையும், கூர்ந்து கவனிக்கும் திறனையும் மேம்படுத்த உதவும்.
இசை – உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய மிகச்சிறந்த விஷயம் இசை. இசை என்பது பாடுவது மற்றும் இசைக்கருவிகளை பயன்படுத்த சொல்லிக் கொடுப்பது என எதுவாகவும் இருக்கலாம். இசை குழந்தைகளின் மனதையும், ஆன்மாவையும் அமைதிப்படுத்தும். பொறுமையாக இருப்பதை கற்றுக் கொடுக்கும் கலையாக இசை உள்ளது. உங்கள் குழந்தைகள் இசை மற்றும் பாடுவதில் ஆர்;வமாக இருந்தால் விடுமுறையை கொண்டாட சிறந்த தருணம் இதுவே.
முகாம்கள் மற்றும் விடுமுறைகள் – குடும்பமாக விடுமுறையில் சென்றாலோ அல்லது கோடைக்கால முகாமாக இருந்தாலோ, குழந்தைகளுக்கு மேலாண்மை பாடங்களை கற்றுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் குழந்தைகளை முகாம்களுக்கு அனுப்பும் போது, அவர்கள் சுயமாக வாழ்வது எப்படி என்றும், தங்களுடைய உடமைகளை பாதுகாப்பது மற்றும் பணத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் கற்றுக் கொள்வார்கள். நீங்கள் குடும்ப விடுமுறைகளில் செல்லும் போது கூட அந்த பயணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், செல்லும் இடத்தைப் பற்றியும் மற்றும் பயணம் செய்யும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.
குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்பவர்களாகவும், நன்கு கவனிப்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் விடுமுறையில் இருக்கும் போது, உங்களுடைய வேலைகளுக்கு உதவி செய்யுமாறும், சிறதாக ஒரு கடை வைத்து அவர்களுடைய செலவிற்கு அவர்களே பணம் சம்பாதிக்கவும் மற்றும் புதிய நண்பர்களை பெறவும் உதவி செய்யுங்கள். வாழ்க்கையின் பாடங்களையும், அன்பையும் மற்றும் நிதி மேலாண்மையையும் கற்றுக் கொடுக்க விடுமுறைகள் தான் சிறந்த பருவங்களாக உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here