பணி நேரத்தில் திருமணநிகழ்வில் பங்கேற்கச்சென்ற பள்ளித்தலைமையாசிரியர் , 7ஆசிரியர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்ககிருஷ்ணகிரி மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர் கே.பி.மகேஸ்வரிவெள்ளிக்கிழமைஉத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,ஒசூர் கல்வி மாவட்டத்துக்குஉள்பட்டமாசிநாயக்கனப்பள்ளியில்உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும்மேற்பட்ட மாணவ,மாணவியர் பயின்றுவருகின்றனர். கடந்தஆண்டு நடைபெற்ற அரசுமேல்நிலைப் பொதுத்தேர்வில் இந்தப் பள்ளிமாணவ, மாணவியர் யாரும்தேர்ச்சி பெறாத நிலையில்,ஆசிரியர்கள் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும் எனபொதுமக்கள்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.

இத்தகைய நிலையில்,கிருஷ்ணகிரி மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர் கே.பி.மகேஸ்வரி,இந்தப் பள்ளிக்கு திடீர்ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, பள்ளியின்தலைமையாசிரியர்குபேந்திரன் மற்றும் 7ஆசிரியர்கள் பணியில்இல்லை. அவர்கள், பள்ளிவருகைப் பதிவேட்டில்கையொப்பம் இட்டநிலையில், பெங்களூரில்நடைபெற்ற திருமணநிகழ்வில் பங்கேற்கச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பணிநேரத்தில் திருமணநிகழ்வுக்குச் சென்றவர்கள்மீது 17(பி) என்ற பிரிவின்கீழ் ஒழுங்கு நடவடிக்கைஎடுக்க, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கே.பி.மகேஸ்வரிஉத்தரவிட்டார். இதனால்,நடவடிக்கைக்கு உள்ளானஆசிரியர்களின் சம்பளஉயர்வு, பதவி உயர்வுபோன்றவை பாதிக்கப்படும்என சக ஆசிரியர்கள்தெரிவித்தனர்.ஆசிரியர்களின் மீதுநடவடிக்கை எடுக்க மாவட்டமுதன்மைக் கல்விஅலுவலர் உத்தரவிட்டதுபள்ளி கல்வித்துறையினரிடையேபரபரப்பைஏற்படுத்தியுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here