தமிழக அரசின், ‘பண்ணை சுற்றுலா திட்டம்’ ;மாணவர்களுக்கு ஏற்பாடு

தமிழக அரசின், ‘பண்ணை சுற்றுலா திட்டம்’ வழியே, அரசு தோட்டக்கலை பண்ணை செயல்பாடுகளை, மாணவ, மாணவியர் அறியலாம்.தமிழகத்தில், 61 அரசு தோட்டக்கலை பண்ணைகள், 19 பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், முதல் கட்டமாக, 23 தோட்டக்கலை பண்ணைகள், இரண்டு பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘பண்ணை சுற்றுலா திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள, அரசு தோட்டக்கலை பண்ணைகளுக்கு சென்று, பண்ணைகளின் செயல்பாடுகள், பயிர் சாகுபடி முறைகள் ஆகியவற்றை அறியலாம்.இத்திட்டத்தில், பெரியவர்களுக்கு, 50 ரூபாய்; சிறியவர்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு, 25 ரூபாய் கட்டணம். இளநீர், எலுமிச்சை சாறு போன்ற இயற்கை பானங்கள், தோட்டக்கலை நடவு செடி, இலவசமாக வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு tnhorticulture.tn.gov.in/horti/ என்ற இணையதளத்தை பார்வையிடவும். 98940 71746 என்ற எண்ணில், ‘வாட்ஸ் ஆப்’ வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here