ராணுவ வீரர் நிதியுதவி இரு மடங்காக உயர்வு

சென்னை :கடலோர காவல் படை வீரர்கள், பணியின் போது இறந்தாலோ, காயமடைந்தாலோ, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவது போல், நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிதியுதவி, இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது.எல்லை பாதுகாப்பு பணி வீரர்கள், எதிரிகள் தாக்குதலில் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின், கார்கில் நிதியிலிருந்து, நிதியுதவி வழங்கப்படுகிறது. அதேபோல், காயமடைந்தோருக்கும் வழங்கப்படுகிறது.வீர மரணமடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு, இதுவரை, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 20 லட்சமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், முழுமையாக ஊனமடைந்த, இரண்டு கைகளை இழந்த, பார்வை இழந்த வீரர்களுக்கு, இதுவரை, ஏழு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், ஒரு கை இழந்தாலோ, ஒரு கண் இழந்தாலோ, ஐந்து லட்சம் ரூபாயை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல, கடலோர காவல் படையினர், பணியின் போது இறந்தாலும், ஊனமடைந்தாலும், ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல, நிதியுதவி வழங்கவும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here