மாணவர்களின் கல்வி பாதிக்கும்- ஆசிரியர் வயது முதிர்வு ஓய்வு நீட்டிப்பு ரத்து – அரசாணை எண்.261 ஐ ரத்து செய்திடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வு ஓய்வப் பெறும்போது 58 வயது முடிவடைந்து கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுப்பெறும் பட்சத்தில் மாணவர்களின் கல்வி நலன்கருதி கல்வி ஆண்டு முடியும்வரை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்து. கல்வி ஆண்டின் இறுதி மாதத்தில் ஓய்வுப் பெறும்போது அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. ஆனால் இதுவரை இருந்த நடைமுறையினை மாற்றி இன்று 261 அரசாணை வெளியிட்டு வயது முதிர்வு ஓய்வு பணி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என அரசு அறிவித்திருப்பது மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிப்படைவார்கள். உதாரணமாக ஒரு ஆசிரியர் நவம்பர் மாதம் ஓய்வுப்பெற்றால் அவர் எடுத்துவந்த பாடமும் மாணவர்களின் உளவியல் அடிப்படையும் புரிந்து அதற்கேற்ப பணிபுரிய முடியும். ஆனால் ஒரு ஆசிரியர் ஓய்வுப்பெற்றப் பிறகு பாதியில் வேறொரு ஆசிரியரை நியமித்தால் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஆகையால் மாணவர்களின் கல்வி நலன்கருதி அரசாணை எண் 261 ஐ திரும்பப் பெறவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்-9884586716

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here