ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

*அரசுப்பள்ளிகளில் கடந்த 2012 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

*ஆறாம் வகுப்பில், இப்பிரிவு துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

*இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.

*மாவட்டந்தோறும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, ஆங்கில வழி பிரிவுக்கு நியமிக்க, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 15 மாணவர்கள் ஆங்கில வழி பிரிவில் படித்தால், இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் வகுப்பு எடுப்பார்.

*இதேபோல், ஒரு வகுப்பறையில், 60 மாணவர்களுக்கு மேல் படித்தால், புதிய பிரிவு துவங்க வேண்டும்.

*மாவட்ட வாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து, வரும் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

*வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில்,’கோவையில் உள்ள, 15 வட்டாரங்களிலும், ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் தயாரானதும், புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவர்’ என்றனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here