ஆசிரியர்களுடன் அமைச்சர் ஆலோசனை

காரைக்கால்:அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 10ம் வகுப்பு மற்றும் 11.12 ஆகிய வகுப்பு தேர்வில் மாணவர்கள் கடந்த ஆண்டை விட அதிக மதிப்பெண் எடுப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.கலெக்டர் கேசவன், கல்வித்துறை அதிகாரி அல்லி முன்னிலை வகித்தனர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறித்து ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.அமைச்சர் கமலக்கண்ணன் பேசுகையில், ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்தாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளும் அதிகம் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here