தேசிய தேசிய வருவாய்வழிமற்றும் படிப்புதவித்தொகைக்கானஎன்.எம்.எம்.எஸ். தேர்வுசற்று கடினமாகஇருந்ததாக தேர்வெழுதியமாணவர்கள்தெரிவித்தனர். 

அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில்எட்டாம் வகுப்புபடித்துக்கொண்டிருக்கும்மாணவர்களுக்கு மத்தியஅரசின் உதவித்தொகைவழங்கப்படுவதற்காகநடத்தப்படும்என்.எம்.எம்.எஸ். தேர்வுதமிழகம் முழுவதும் 521மையங்களில்சனிக்கிழமைநடைபெற்றது. 

இதில் பங்கேற்க 1 லட்சத்து44,427 மாணவர்கள்விண்ணப்பித்திருந்தநிலையில் அதில் 96 சதவீதமாணவர்கள்தேர்வெழுதியதாகஅதிகாரிகள்தெரிவித்தனர்.

என்.எம்.எம்.எஸ். தேர்வுகாலை, முற்பகல் என இருகட்டங்களாகநடைபெற்றது.  முதல்கட்டமாக நடைபெற்றமனத்திறன் தேர்வில்(ஙஅப) எண்தொடர்கள்,எழுத்துதொடர்கள்,ஆங்கிலஅகராதிப்படி எழுத்துகளைவரிசைப்படுத்துதல்,தனித்த எண்ணைகண்டறிதல்,வெண்படங்கள் தொடர்பாக 90வினாக்கள்இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு வினாவுக்கும் ஒரு மதிப்பெண்.

இதைத் தொடர்ந்துமுற்பகலில் படிப்பறிவுத்தேர்வில் (நஅப) ஏழாம்வகுப்பு அறிவியல்,கணக்கு, சமூக அறிவியல்பாடங்களில் இருந்தும்,  8-ஆம் வகுப்பு அறிவியல்,கணக்கு மற்றும் சமூகஅறிவியல் பாடங்களில்முதல் இருபருவங்களிலிருந்தும் 90வினாக்கள்இடம்பெற்றிருந்தன.  இருகட்டங்களாக நடைபெற்றதேர்வில் மொத்தம் 180மதிப்பெண்களுக்குமாணவர்கள்தேர்வெழுதினர்.  தவறானவிடைக்கு எதிர் மதிப்பெண்கிடையாது.

இதுகுறித்து மாணவர்கள்கூறுகையில், என்.எம்.எம்.எஸ். தேர்வில்கணிதம்,  ஆங்கிலப்பகுதியில்இடம்பெற்றிருந்தவினாக்கள் சற்று கடினமாகஇருந்தன.  பல வினாக்கள்நன்கு யோசித்துபதிலளிக்கக் கூடியவகையில்இடம்பெற்றிருந்தன.

இருப்பினும் சமூகஅறிவியல்,  அறிவியல்போன்ற பகுதிகளில்இடம்பெற்றிருந்தகேள்விகள் ஏற்கெனவேபடித்தவை என்பதால்ஓரளவுக்கு எளிதாகபதிலளிக்க முடிந்ததுஎன்றனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

1 COMMENT

 1. 🔥🔥🔥🔥🔥🔥🔥

  NMMS தேர்வும்
  தொடரும் மர்மமும்…

  இந்த வருடமாவது தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவனின் மதிப்பெண் வெளியிடப்படுமா??

  ரெஜிஸ்டர் நம்பர் கொடுத்தவுடன் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அல்லது தோல்வி அடைந்தாலும் மதிப்பெண் வெளியிடப்படுமா?

  அல்லது வழக்கம்போல் தேர்வு செய்யப்பட்டவர்கள் எனக்கூறி ஆயிரம் பக்கம் அல்லது 2000 பக்கம் கொண்ட பிடிஎப் பைலாக வெளியிடப்பட்டு வெளியிடப்பட்டு, பெயர் ஒரு பக்கம் 40 ஆம் பக்கத்தில் பள்ளி பெயர் என வருமா??

  ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதும் மாணவனின் தனித்தனி மதிப்பெண் வெளியிடப்படுவதில்லை இந்த குறையை இந்த வருடமாவது சரி செய்யுமா? NMMS தேர்வுத்துறை.

  ரெஜிஸ்டர் நம்பர் மற்றும் டேட் ஆப் பர்த் பிறந்த தேதி கொடுத்து ஒவ்வொரு மாணவனும் தனது மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லையா?

  இன்று தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவனும் தான் பெற்றுள்ள மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளக்கூடாதா?

  அவற்றை வெளியிடுவதில் தேர்வுத்துறைக்கு என்ன சிரமம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here