ஆசிரியர்களுக்கு நடக்கும்தொடர் பயிற்சிகளால்,அரையாண்டு தேர்வு நடத்த,ஆசிரியர்கள் இல்லாமல்,தலைமை ஆசிரியர்கள்அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில், பிளஸ்1 வகுப்பு இரண்டாம்தொகுதிபாடப்புத்தகங்களுக்காக,ஒவ்வொரு பாடஆசிரியர்களுக்கும்,இரண்டு நாள் பயிற்சிவழங்கப்பட்டு வருகிறது.டிச., 13, 14 மற்றும் 17,18தேதிகளில், வேதியல் பாடஆசிரியர்களுக்குமேட்டுப்பட்டி, சேலம்இன்ஜினியரிங்கல்லூரிகளில் பயிற்சிநடைபெறுகிறது.மாணவியரிடையே சத்தானஉணவு மற்றும் சுகாதாரவிழிப்புணர்வை ஏற்படுத்த,ஒவ்வொருபள்ளியிலிருந்து இரண்டுபெண் ஆசிரியர்களுக்கு,இரண்டு நாள்பயிற்சியளிக்கப்பட்டது.தொடர்ந்து, ஆறு, ஏழு,எட்டாம் வகுப்புஆசிரியர்களுக்கு, கற்றல்அடைவு மற்றும் தேசியஅடைவு ஆய்வுக்கானசெயல்பாடுகள் குறித்து,பாடவாரியாக, அனைத்துஆசிரியர்களுக்கும் தலாஇரண்டு நாள் பயிற்சி, டிச., 13 முதல் வழங்கப்படுகிறது.மேற்கண்ட அத்தனைபயிற்சிகளும்,அரையாண்டு தேர்வுநடத்தப்படும், டிச., 11 முதல், 22 வரை, நடக்கிறது.இதனால், ஒவ்வொருபள்ளியிலிருந்தும்,குறைந்தது நான்குஆசிரியர்கள் வரைபயிற்சிக்கு செல்லவேண்டியுள்ளது.அரையாண்டு தேர்வுகளைநடத்த முடியாமல், பள்ளிதலைமை ஆசிரியர்கள்,தவிப்புக்குள்ளாகின்றனர்.

 

இதுகுறித்து பள்ளிதலைமை ஆசிரியர்கள்கூறியதாவது: அனைத்துவகுப்புகளுக்கும்அரையாண்டு தேர்வுநடக்கும் நேரத்தில், தொடர்பயிற்சிகள்திட்டமிட்டிருப்பது கடும்அவதியைஏற்படுத்தியுள்ளது. பயிற்சிஆசிரியர்களையும்,பகுதிநேரபணியாளர்களையும்வைத்து, பலரும் தேர்வுநடத்துகின்றனர். தேர்வுநேரத்தில் ஆசிரியர்கள்இல்லாததால்,மாணவர்களுக்கானசந்தேகங்களுக்கு விளக்கம்தர முடியாத நிலை உள்ளது.தேர்வு முடிந்த பின்,இப்பயிற்சிகளைதிட்டமிட்டிருக்கலாம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here