பள்ளிகள் ஆய்வில் புதியநடைமுறை வேண்டாம் எனஆசிரியர் பயிற்றுனர்கள்(பி.ஆர்.டி.இ.,)வலியுறுத்தினர்.அரசுமற்றும் உதவி பெறும்பள்ளியில் கற்றல்கற்பித்தலை பி.ஆர் டி.இ.,க்கள் ஆய்வு செய்கின்றனர்.

தேசிய அடைவு ஆய்வில்(நாஸ்) மாநிலத்தில் மதுரை27வது இடத்தில்இருப்பதால் பி.ஆர்டி.இ.,ஆய்வை துரிதப்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டது.இதன்படி அவர்கள்ஆய்வுக்கு சென்றவுடன்சென்ற நேரம், பள்ளியில்இருப்பது போன்றபோட்டோவைவாட்ஸ்ஆப்பில்மேற்பார்வையாளர் மற்றும்பி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பமுதன்மை கல்வி அலுவலர்சுபாஷினி உத்தரவிட்டார்.

  

பி.ஆர்.டி.இ.,க்கள்கூறுகையில், “நாஸ் தேர்வுதேர்ச்சி குறைய ஆசிரியர்,பி.இ.ஓ.,க்களுக்கும்பொறுப்பு உள்ளது. ஆய்வுஅறிக்கைமேற்பார்வையாளரிடம்அளிக்கிறோம். துறைக்குதொடர்பில்லாதபி.இ.ஒ.,க்களுக்கும்தெரிவிக்க வேண்டும் என்றபுதிய நடைமுறைவேண்டாம்,” என்றனர்.

சி.இ.ஓ.,கூறியதாவது:’நாஸ்’ல்முதல் ஐந்து இடத்திற்குள்மதுரை வர ஆசிரியர்ஒத்துழைப்பு அவசியம்.பி.ஆர்.டி.இ.,கள் அனைத்துபள்ளிக்கும் செல்கின்றனர்.இதனால் ஆசிரியர்களும்சரியான நேரத்திற்குவருவர். 1- 5ம் வகுப்பு வரைபி.இ.ஓ.,க்களுடன் தொடர்புஏற்படுத்த அவர்களிடம்ஆய்வு விவரம் அளிக்கஅறிவுறுத்தப்பட்டது.குறைகள் குறித்துபி.ஆர்.டி.இ., நேரில்தெரிவிக்கலாம். உரியமாற்றம் செய்யப்படும்என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here