தமிழகத்தில் பள்ளிக் கல்விதொடர்பானவிஷயங்களைஒளிபரப்புவதற்காக கல்வித்தொலைக்காட்சி பொங்கல்திருநாளில்தொடங்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில்மாணவர்கள், ஆசிரியர்கள்,பள்ளிக் கட்டமைப்புமேம்பாட்டுக்கான பல்வேறுநடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக புதியபாடத்திட்டம், ரேங்க் முறைரத்து, எஸ்சிஇஆர்டி யூடியூப்-சேனல் போன்றதிட்டங்களுக்குபொதுமக்கள் மத்தியில்நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறையின்திட்டங்களை மக்களிடம்எடுத்துச் செல்லவும்,பொதுத்தேர்வுகள், கல்விஉதவித்தொகை தேர்வுகள்,நுழைவுத் தேர்வுகள்தொடர்பாகமாணவர்களுக்குஆலோசனைகள்வழங்கவும் புதியதொலைக்காட்சிஅலைவரிசைதொடங்கப்படும் எனபள்ளிக் கல்வித்துறைஅமைச்சர்செங்கோட்டையன்அறிவித்திருந்தார்.
இதையடுத்து இதற்கானபணிகளை மேற்கொள்ளபள்ளி கல்வி இயக்குநர்வி.சி. ராமேஸ்வர முருகன்,மாநிலகல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவன இயக்குநர்க.அறிவொளி,ஒருங்கிணைந்த கல்விதிட்டஇயக்குநர்சுடலைகண்ணன் மற்றும்இணை இயக்குநர்கள்கொண்ட குழுஅமைக்கப்பட்டது.கல்வித்தொலைக்காட்சிஅலைவரிசைக்கானதொழில்நுட்பப் பணிமற்றும்தொலைக்காட்சிக்கானமுன்தயாரிப்பு காட்சிகளைப்பதிவு செய்யவும் தனியாகஒரு குழுவும்ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதே போன்று கேமராக்கள்,தொழில்நுட்பக்கருவிகள்வாங்கும்பணிகளும்தொடங்கியுள்ளன.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்கூறியது:இந்தியாவில்கேரளம் உள்ளிட்ட ஒருசிலமாநிலங்களில் மட்டுமேகல்விக்கென பிரத்யேகதொலைக்காட்சி சேனல்உள்ளது. இது போன்றஅலைவரிசையை தமிழகமாணவர்களுக்காகதொடங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணா நூற்றாண்டுநூலகத்தில்…. கல்வித்தொலைக்காட்சிக்கானபடப்பிடிப்பு மற்றும்தொழில்நுட்ப தளம்(ஐய்ற்ங்ஞ்ழ்ஹற்ங்க்உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப்இட்ஹய்ய்ங்ப்இங்ய்ற்ழ்ஹப்ண்ள்ங்க்நற்ன்க்ண்ர்) சென்னைகோட்டூர்புரம் அண்ணாநூற்றாண்டு நூலகத்தின் 8ஆவது தளத்தில்அமையவுள்ளது. பள்ளிக்கல்வி செயல்பாடுகளைப்பதிவு செய்வதற்காகவழக்கமானகேமராக்களுடன் ஆளில்லாபறக்கும் கண்காணிப்பு(“ட்ரோன்’) கேமராவாங்கப்படும். இந்தப்பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.1.35 கோடிஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
என்னென்ன அம்சங்கள்?:
 கல்வித் தொலைக்காட்சிஅரசு கேபிளில் 200 ஆவதுஅலைவரிசையில்ஒளிபரப்பாகும். புதிதாகதொடங்கப்படவுள்ளஎல்.கே.ஜி. வகுப்புகள் முதல்பிளஸ் 2 வகுப்பு வரைபள்ளிக் கல்விக்காக அரசுசெயல்படுத்தும் திட்டங்கள்,கல்வி உதவித்தொகைகளுக்குவிண்ணப்பிக்கும் முறை,நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கானவிளக்கங்கள், புதுமையானமுறையில் கற்பிக்கும்ஆசிரியர்களின்நேர்காணல், அரசுப் பள்ளிமாணவர்களின்கண்டுபிடிப்புகள்,பள்ளிகளுக்கான முக்கியசுற்றறிக்கைகள்,கல்வியாளர்களின்கலந்துரையாடல் என பலஅம்சங்கள் இடம்பெறும்.
இதன் மூலம் கல்வித்துறைசார்ந்த அனைத்துசெயல்பாடுகளையும்மாணவர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள் உடனுக்குடன்தெரிந்து கொள்ள முடியும்.பொங்கல் திருநாளில்கல்வித்தொலைக்காட்சிஒளிபரப்பை தொடங்கதிட்டமிட்டுள்ளோம் என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here