3,500 ஆசிரியர் பணியிடம் ரத்து ?

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரியாக கணக்கிடப்பட்டுள்ள 3,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ரத்தாகின்றன.ஆக., 1ல் மாணவர்கள் வருகைப்படி, ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கபடுகின்றன. கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை உபரியாக கணக்கிட்டு, வேறு பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப் படுவர். 

கடந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்ய ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பணி நிரவல் நிறுத்தப்பட்டது.  

தற்போது 2017 ஆக., 1 ன் படி உபரியாக கணக்கிட்டு 3,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை பள்ளிகல்வி இயக்குனரின் பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. இதனால் அப்பணியிடங்கள் அனைத்தும் ரத்தாகின்றன. பணியிடங்கள் குறைவதால், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி அடைந்தோர் ஆசிரியராவதில் சிக்கல் ஏற்பட்டது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உபரி பணியிடங்களில் ஆசிரியர்கள் இருந்தால், அப்படியே இருக்கலாம். ஓய்வு, இறப்பு மூலம் காலியான உபரி பணியிடங்களே ரத்தாகின்றன. அவற்றை அடுத்த கலந்தாய்வில் காலியிடங்களாக காட்ட முடியாது. பணியிடங்கள் குறைவதால் புதியவர்களுக்கு வாய்ப்பு குறைகிறது, என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here