ஜாக்டோ- ஜியோபோராட்டம் தற்போதுஇல்லை – இன்றுநடைபெற்ற நீதிமன்றவழக்கு முழு விவரம்

 ஜாக்டோ-ஜியோஅறிவித்திருந்தவேலைநிறுத்த போராட்டம்மீண்டும்ஒத்திவைக்கப்பட்டது.வேலைநிறுத்தபோராட்டத்தை ஜன.7ம்தேதி வரை மீண்டும்ஒத்திவைத்துள்ளதாகஉயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஜாக்டோ ஜியோநிர்வாகிகள்அறிவித்துள்ளனர்.

ஜாக்டோ – ஜியோவிவகாரம்

தமிழகத்தில் கடந்த 2003-ம்ஆண்டுக்கு பிறகு பணியில்சேர்ந்தவர்களுக்குஅறிவிக்கப்பட்டுள்ள புதியஓய்வு ஊதிய திட்டத்தைகைவிட்டு, பழைய ஓய்வுஊதிய திட்டத்தைஅமல்படுத்துதல்,இடைநிலைஆசிரியர்களுக்கு மத்தியஅரசுக்கு இணையானஊதியம் வழங்குதல்,முதுநிலை ஆசிரியர்கள்,அனைத்து ஆசிரியர்கள்,கண்காணிப்பாளர்கள்,தலைமைச் செயலகம்உள்ளிட்ட அரசு ஊழியர்கள்,பணியாளர்கள் பல்வேறுதுறைகளில் உள்ளதொழில் நுட்ப ஊழியர்கள்,ஊர்து ஓட்டுநர்கள்ஆகியோருக்கான ஊதியமுரண்பாடுகளை களைதல்,உள்ளிட்ட கோரிக்கைகளைமுன்வைத்து கடந்த சிலஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசுஎந்தவிதபேச்சுவார்த்தைக்கும்அழைக்காததால், டிசம்பர் 4-ம் தேதியில் இருந்து தொடர்வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவதாகஜாக்டோ – ஜியோ அமைப்புஅறிவித்தது. இந்நிலையில்கடந்த நவம்பர் 30-ம் தேதிபேச்சுவார்த்தைக்கு அரசுஅழைப்பு விடுத்தது.

வேலைநிறுத்தப்போராட்டம் அறிவிப்பு

அரைநாள் நடந்தபேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்ததால்திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4-ம் தேதிகாலவரையற்ற தொடர்வேலை நிறுத்தப்போராட்டத்தைதொடங்குவதாக இருந்தது.இதனையடுத்து ஜாக்டோஜியோ அமைப்புஅறிவித்துள்ளவேலைநிறுத்தபோராட்டத்திற்கு தடைவிதிக்க கோரிஉயர்நீதிமன்ற மதுரைகிளையில் முறையீடுசெய்யப்பட்டது.

கஜா புயல் பாதிப்பு,பள்ளிகளில் அரையாண்டுதேர்வுகள் நடைபெறும்வேளை போன்றவை இந்தபோராட்டத்தால்பாதிக்கப்படும் என்ற சூழல்உருவாகியுள்ளதாகதாக்கல் செய்யப்பட்டமனுவில் புகார்தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து இந்தவழக்கை அவசர வழக்காக உயர்நீதிமன்றமதுரைக்கிளை நீதிபதிகள்சசிதரன், சாமிநாதன்அடங்கிய அமர்வுவிசாரணை நடத்தியது.இந்த வழக்குவிசாரணையில் நீதிபதிகள்யோசனையை ஏற்றுவேலை நிறுத்தத்தைடிசம்பர் 10-ம் தேதி வரைஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின்நிர்வாகிகள் உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் தகவல்தெரிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தப்போராட்டம் மீண்டும்ஒத்திவைப்பு

இந்நிலையில் இந்தவழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தது.அப்போது ஜாக்டோ – ஜியோவிவகாரம் தொடர்பாகஇதுவரை தொடுக்கப்பட்டவழக்குகளில் தமிழக அரசுஎடுத்த நடவடிக்கைகள்குறித்த அறிக்கையை தமிழக அரசின்வழக்கறிஞர் தாக்கல்செய்தார். அதைத்தொடர்ந்து நீதிபதிகள்கூறியதாவது,’தமிழக அரசுஊழியர்களுக்கு பழையஓய்வூதிய திட்டத்தை அமல்செய்வது தொடர்பாகநியமிக்கப்பட்ட ஸ்ரீதர்ஆணையத்தின் அறிக்கைஅரசுக்கு சமர்பிக்கப்பட்டுஉள்ளது, அதன்மேல்எடுக்கப்பட்டநடவடிக்கைகள் என்ன ?..

இந்த விவரங்களைஎல்லாம் சிலீட்ட கவரில்வைத்து இரு வாரங்களில்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும், இவ்வாறுநீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனையடுத்துவேலைநிறுத்த போராட்டம்மீண்டும்ஒத்திவைக்கப்படுவதாகநீதிமன்ற வளாகத்தில்ஜாக்டோ ஜியோநிர்வாகிகள் கூறினர்.இதனிடையே டிச.10- ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டபோராட்டம் ஜன.7 வரைமீண்டும்ஒத்திவைக்கப்பட்டது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here