தமிழகத்தில் பெண்களின்பாதுகாப்பிற்காக ‘181’இலவச தொலைபேசி எண்திங்கள்கிழமை முதல்அறிமுகம் செய்யப்படஉள்ளது.

நாடு முழுவதும்பெண்களின்பாதுகாப்பிற்காக ‘181’என்னும் இலவசதொலைபேசி எண்ணைகடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு மத்திய அரசுஅறிமுகப்படுத்தியது.தில்லி, குஜராத் உள்ளிட்டஒரு சில மாநிலங்களில்மட்டும் இந்த சேவைதற்போது செயல்பாட்டில்உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில்பெண்களின்பாதுகாப்பிற்காக ‘181’இலவச தொலைபேசி எண்திங்கள்கிழமை முதல்அறிமுகம் செய்யப்படஉள்ளது.

 

குடும்ப வன்முறை,வரதட்சணை கொடுமை,பாலியல் துன்புறுத்தல்,உடல்-மனநல பாதிப்புகள்,பெண்களுக்காக அரசுசெயல்படுத்தும் திட்டங்கள்,பள்ளிகள், கல்லூரிகளில்வழங்கப்படும்ஸ்காலர்ஷிப்புகள் உள்படகுழந்தைகள் முதல்முதியோர் வரைபெண்களுக்கு தேவையானஉதவி மற்றும்பாதுகாப்புக்கு இந்தஎண்ணை அழைக்கும்வகையில் விரிவானஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது

இந்த எண்ணிற்கு வரும்புகார்களை சேவைமையத்தை நிர்வகிக்கும்அதிகாரிகள் முறையாகபதிவு செய்து வைக்கும்படிஉத்தர விடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பிரச்சினைக்குதீர்வு கண்டவுடன்குறிப்பிட்ட காலஇடைவெளிக்குப் பிறகுமீண்டும் அந்த பெண்ணின்நிலை என்ன என்றுஆராய்ந்து பிரச்சினைகள்தீர்ந்து விட்டதை உறுதிசெய்ய வேண்டும் என்றுசமூக நலத்துறைஉத்தரவிட்டுள்ளது.

இந்த சேவை மையத்துடன்காவல்துறை, மருத்துவம்,சட்ட உதவிகள், கவுன்சிலிங்ஆகிய துறைகள்ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம்இருந்துவரும்அழைப்புகளின்அடிப்படையில்அவர்களுக்கு தேவையானஉதவிகள் வழங்க இதுஏதுவாக இருக்கும்.

இந்த ‘181’ இலவசதொலைபேசி எண்சேவையை தலைமைச்செயலகத்தில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி நாளைதிங்களன்று துவங்கிவைக்கிறார் என்று தகவல்வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here