✍🏼செல்வ.ரஞ்சித்குமார்._

அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்கு உரியகாலத்தில்தீர்க்கப்பட்டிருக்க வேண்டியகுறைகள் நீண்டகாலக்கோரிக்கைகளாகஉருப்பெற்று அதைத்தீர்க்கக் கோரும் களப்போராட்டங்கள்தீவிரமடையும் சூழலிலும்அதை நேரடியாகக்களையாது கோரிக்கைமீதான *உரிமைவேட்கையைத் தணிக்கும்விதமாகவே குறைதீர்குழுக்கள்அமைக்கப்பட்டிருப்பதுதமிழகம் கண்ட வரலாறு.

தற்போதும் ஜாக்டோ-ஜியோ மீண்டுமொருவீரியமிகு போராட்டமுகட்டில் நிற்கையில்,அதன் கடந்த காலகளப்போராட்டங்களில் ஒருபொருட்டாகக் கண்டுகொள்ளப்படாத CPS நீக்கவல்லுந‌ர் குழுவும், அரசுஊழியர் ஆசிரியர் ஊதியமுரண்பாடு களையஅமைக்கப்பட்ட ஒரு நபர்குழுவும் ஊதிப்பெரிதாக்கப்படுகின்றன.

உண்மையில் *JACTTO-GEOபோராட்டங்கள்எந்நிலையிலும் அரசுஅமைக்கும் குழுக்களைக்காரணம் காட்டிநகர்த்தப்படவோ -நிறுத்தப்படவோ இல்லை*என்பது எனது அனுபவத்தெளிவு.

நான் பெற்றஅனுபவத்தைப்பெற்றிருப்பினும் அதைமறந்துவிட்ட சகஇடைநிலைஆசிரியர்களுக்குஇதன்வழி அதைநினைவூட்டகடமைப்பட்டுள்ளேன்.ஏனெனில், தற்போதுகுழுவைக் காட்டி ஏமாற்றும்வித்தைக்குள்ளாகச் சிலர்சிக்குண்டுள்ளனர்.

தற்போதும் ஓய்வூதியவல்லுந‌ர் குழு & ஊதியமுரண்தீர் ஒரு நபர் குழுஇரண்டையும் கவனத்தில்ஏற்றி நீதிமன்றவிசாரணையைஎதிர்நோக்கி அரசு ஊழியர்& ஆசிரியர்களின் கண்கள்பூத்துப்போய்க்கிடக்கின்றன.

இவ்விரண்டுமே JACTTO-GEOவின் கோரிக்கைகளைத்தீர்த்துவிடப் போவதில்லைஎன்பதை முன்பேஉணர்ந்ததாலேயேகுழுக்களின் முடிவிற்குக்காத்திருக்காது களத்தில்இறங்கி போராடிக்கொண்டிருக்கிறது JACTTO-GEO.

JACTTO-GEO-வின்போக்கினை உணர்ந்தோர்அனைவரும் வேண்டுவது, *10.12.2018-ற்குப் பின் காலம்தாழ்த்தாது 11.12.2018 முதல்காலவரையற்றவேலைநிறுத்த களத்தில்இறங்க வேண்டும்*என்பதே.

ஏனெனில் வழக்காடு மன்றஅனுபவங்களும், அரசின்சாக்குப்போக்கானஉறுதியளிப்புகளும்நமக்குக்கற்றுக்கொடுத்துள்ளது, *”காத்திருப்புகள் அல்லகளப்போராட்டமே தீர்வைத்தரும்!”* என்பதைத்தான்.

_கற்று மறந்தோரின்நினைவூட்டலுக்காககுழுக்கள் அமைக்கப்பட்டமுறைமையும் ஜாக்டோ-ஜியோவின் போராட்டநடைமுறையையும்பறவைப் பார்வையாகஇங்கே பகிர்ந்துள்ளேன்._

*🔛 10.02.2016*

பல கட்டப் களப்போராட்டங்களைக் கடந்து*தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் CPS நீக்கம் உள்ளிட்டகோரிக்கைகளுடன்காலவரையற்றவேலைநிறுத்தத்தில்*இறங்கியது.

*🔛 11.02.2016*

 

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற*அமைச்சர் குழு & ஜாக்டோகூட்டமைப்பிற்குஇடையேயானபேச்சுவார்த்தைதோல்வியில்முடிவடைந்தது.* எனினும்,முன்னரே தீர்மானித்திருந்தபோராட்ட அறிவிப்பைஜாக்டோ கூட்டமைப்புஅறிவிக்கவில்லை.

*🔛 12.02.2016*

எனவே, *ஓய்வூதியக்கோரிக்கையோடேஇடைநிலைஆசிரியர்களின் மத்தியஅரசு ஆசிரியர்களுக்குஇணையான ஊதியகோரிக்கையையும்வலியுறுத்தி* திருச்சிமாநிலச் செயற்குழுமுடிவின்படி *தமிழ்நாடுஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணியும், இந்தியப்பள்ளி ஆசிரியர்கூட்டமைப்பின் உறுப்புசங்கங்களும்வேலைநிறுத்தத்தில்* உடன்இணைந்தன. *19.02.2016-ல்சட்டப்பேரவையில்முதல்வர், சத்துணவுஊழியர்களுக்கானஓய்வூதிய (ரூ.1,500) உயர்வு,சமையல் உதவியாளர்பணப்பயன் ரூ.25,000உயர்வு, குழுக் காப்பீட்டுதொகை 3 லட்ச ரூபாய்உயர்வு, அரசு ஊழியர்நிர்வாக தீர்ப்பாயம்*உள்ளிட்ட அறிவிப்புகளைத்தொடர்ந்து நடைபெற்றபேச்சுவார்த்தையோடேபோராட்டம்ஒத்திவைக்கப்பட்டது.இதன் பின்னரே *CPS-ல்இறந்த பணியாளருக்குபங்களிப்பு தொகை வழங்கஆணை* வெளியிடப்பட்டது.

*🔛 19.02.2016*

பல்வேறு அரசுஊழியர்களின்கோரிக்கையைக்கவனத்தில் கொண்டு, *பழைய ஓய்வூதியத்திட்டத்தைநடைமுறைப்படுத்துவதற்கான* சாத்தியக் கூறுகளைஆராய்ந்து அறிக்கைசமர்ப்பிக்க *வல்லுந‌ர் குழு*அமைக்கப்படும் என்றுசட்டப்பேரவையில் விதிஎண் 110-ன் கீழ், மாண்புமிகுதமிழக முதலமைச்சர்செல்வி.ஜெ.ஜெயலலிதாஅறிவித்தார்.

*🔛 26.02.2016*

பழைய ஓய்வூதியத்திட்டத்தைநடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளைஆராய *G.O.Ms.No.65, Finance (PGC) Department, dated 26.02.2016-ன்* படி*திருமதி.சாந்தசீலா நாயர்இ.ஆ.ப* தலைமையில்வல்லுந‌ர் குழுஅமைக்கப்பட்டது.

_(அதன்பின்னர்தொடர்ச்சியாக இரண்டுஆண்டிற்கும் மேலாகக்காலநீட்டிப்பு செய்யப்பட்டவல்லுந‌ர் குழு திரு.ஸ்ரீதர்தலைமையில் தற்போதுஅரசிடம் அறிக்கைஅளித்துள்ளது.)_

  

*🔛 07.09.2017*

பலகட்ட தனிச்சங்கப்போராட்டங்களையும்பிரிவினைகளையும் கடந்துஉருப்பெற்ற *JACTTO-GEOகூட்டமைப்பு செப்.7 முதல்காலவரையற்றவேலைநிறுத்தத்தில்*இறங்கியது.

*🔛 15.09.2017*

அரசின் நெருக்கடிகள்,நீதிமன்றத் தடைகள்,அனைத்தையும் கடந்துதீரமுடன் 8 நாள்களாகநடைபெற்றவேலைநிறுத்தப்போராட்டத்தில் *சென்னைஉயர்நீதிமன்றமதுரைக்கிளை JACTTO-GEOவிற்கு அளித்தஉத்தரவாதத்தின் படி15.09.2017 பிற்பகல் 2மணிக்கு பணிக்குத்திரும்பினர்*ஆசிரியர்களும் அரசுஊழியர்களும்.

*🔛 21.09.2017*

JACTTO-GEO-வின்கோரிக்கைகள் மீதானநியாயத்தை உணர்ந்தநீதிமன்றத்தின்அறிவுறுத்தலால், *தமிழ்நாடு அரசின்தலைமைச்செயலாளர்நீதிமன்றத்தில் ஆஜராகிதன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் தொடர்பானவல்லுநர் குழுவின்அறிக்கை 30.11.2017-க்குள்பெறப்படும்* என்றுஉறுதியளித்தார்.

மேலும், 30.09.2017-ற்குள்ஊதியக்குழு அறிக்கைசமர்ப்பிக்க அரசிற்குஉத்தரவிட்டதோடு, *13.10.2017-ல் புதியஊதியக்குழுவைநடைமுறைப்படுத்தவேண்டும். இல்லையேல்அடுத்த கட்ட விசாரணைநடைபெறும்  23.10.2017-ல்இடைக்கால நிவாரணம்குறித்து அறிவிக்கவேண்டும்.வேலைநிறுத்தம்தொடர்பாக எவ்விதஒழுங்கு நடவடிக்கைகளும்மேற்கொள்ளக் கூடாது.வேலைநிறுத்தகாலத்திற்கு ஊதியப்பிடித்தம் செய்யக் கூடாது*என நீதிமன்றம்உத்தரவிட்டது.

*🔛 11.10.2017*

இதனைத் தொடர்ந்துதமிழக அரசின் 8-வதுஊதிய மாற்றக்குழுவின்பரிந்துரைகள் *G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, Dated: 11.10.2017.-ன்* படிவெளியிடப்பட்டது.

*🔛 08.12.2017*

ஊதிய முரண்பாடுகளோடேநடைமுறைக்கு வந்தஊதியக்குழு அரசாணை, CPS நீக்கக் கோரிக்கைபரிசீலிக்கப்படாமை &ஜாக்டோ-ஜியோ மீதானவழக்கு விசாரணை டிசம்பர்20-க்கு ஒத்திவைப்புஉள்ளிட்ட சூழலில் 08.12.2017மதுரையில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றுஅடுத்த கட்ட போராட்டஅறிவிப்புகளோடே, சனவரி4-வது வாரத்தில் இருந்து, *ஜாக்டோ-ஜியோவின்அனைத்து உறுப்புசங்கங்களும் மாவட்டம்வாரியாக சுழற்சிமுறையில், சென்னையில்காலவரையற்ற தொடர்மறியலில்* ஈடுபடுதல்எனவும் அறிவித்தது.

*🔛 15.12.2017*

 

ஜாக்டோ-ஜியோகூட்டமைப்பின் சார்பாக,மாண்புமிகு தமிழகமுதலமைச்சர்திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களை நேரில்சந்திப்பதாக இருந்தநிலையில், தவிர்க்கஇயலாத அலுவல்காரணமாக முதல்வரைநேரில் சந்திக்கஇயலாததால் *கோரிக்கை &நீதிமன்ற நடவடிக்கைதொடர்பான மனுவைமுதல்வர்அலுவலகத்திலும்,தலைமைச் செயலர் &நிதித்துறை முதன்மைச்செயலரிடம்*வழங்கப்பட்டது.

*🔛 08.01.2018*

மாண்புமிகு தமிழக*ஆளுநர்திரு.பன்வாரிலால்புரோகித்* அவர்கள் தனதுஆளுநர் உரையில் *அரசுஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் ஊதியமுரண்பாடுகளைக் களையஒருநபர் குழு*அமைக்கப்படும் எனஅறிவித்தார்.

*🔛 19.02.2018*

ஜாக்டோ-ஜியோவின்கோரிக்கைகள் எதுவும்தீர்க்கப்படாத சூழலில்வழக்கமான காலம் கடத்தும்நடவடிக்கையாக *FINANCE (PAY CELL) DEPARTMENT G.O.Ms.No.57, Dated: 19th February, 2018-ன் படிM.A.சித்திக் இ.ஆ.ப*அவர்களின் தலைமையில் *31.07.2018-ற்குள் அறிக்கைசமர்ப்பிக்க* ஒரு நபர் குழுஅமைக்கப்பட்டது.

*🔛 21.02.2018*

நீண்ட காலகோரிக்கைகளுக்குச்செவிசாய்க்காது 30.11.2017-ல் சமர்ப்பிப்பதாகதலைமைச்செயலாளரேநீதிமன்றத்தில்உறுதியளித்த CPS நீக்கவல்லுநர்குழுவின்அறிக்கையே வெளிவராசூழலில் ஊதியத்திற்கானஒரு நபர் குழு அமைத்ததன்நோக்கம் உணர்ந்து,முன்னர் அறிவித்தபடியேசிறு கால தாமதத்துடன்*21.02.2018 முதல் 4நாள்களாக சென்னையில்ஜாக்டோ-ஜியோ-வின்மறியல்* போராட்டம்நடைபெற்றது.

*🔛 24.02.2018*

4 நாள்கள் மறியலைத்தொடர்ந்து அடுத்த கட்டபோராட்ட வடிவத்தினைத்திட்டமிடக்கூடிய  ஜாக்டோ-ஜியோ-வின் மாநிலஉயர்மட்டக்குழுக்கூட்டத்தில் மீண்டுமொருமாவட்ட மறியலைத்தொடர்ந்து, *1985, 1988–ல்நடைபெற்ற தலைநகர்முற்றுகையைப் போன்று*மற்றுமொரு வீரஞ்செறிந்தமுற்றுகையை 08.05.2018அன்று, இலட்சக்கணக்கானஅரசு ஊழியர் &ஆசிரியர்களைச்சென்னையில் கூட்டி*தலைமைச் செயலகமுற்றுகை நடத்துதல்* எனத்தீர்மானிக்கப்பட்டது.

   

*🔛 08.05.2018*

*சென்னையே முடங்கும்அளவிற்குஇலட்சக்கணக்கான அரசுஊழியர் & ஆசிரியர்கள்சென்னையில் கூடிதலைமைச் செயலகத்தைமுற்றுகையிட* முயன்றுகைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டோரைஅடைக்க தற்காலிகச்சிறையின்றி தலைநகரேதிக்குமுக்காட இறுதியில்இராஜரத்தினம்விளையாட்டரங்கம்நிரம்பியது.

*🔛 11.06.2018*

*ஜாக்டோ-ஜியோ-வின்மாநில உயர்மட்டக்குழுஉறுப்பினர் & மாநிலநிர்வாகிகள் சென்னையில்,காலவரையற்றஉண்ணாவிரதப்போராட்டத்தைத்தொடங்கினர்.* நான்காம்நாளில் அரசின்அடக்குமுறைகளால்முடிவிற்கு வந்தது.

*🔛 03.12.2018*

மீண்டும் பலகட்டசிக்கல்களையும்போராட்டங்களையும் கடந்துபிரிந்து சென்றஇயக்கங்கள்இணைந்ததையடுத்துஒருவார கால தாமதத்துடன்04.12.2018-ல் காலவரையற்றவேலைநிறுத்தத்தில்இறங்கும் முன்னாக*நீதிமன்றம் கேட்டுக்கொண்டதற்கிணங்கவேலைநிறுத்தம் 10.12.2018வரைஒத்திவைக்கப்பட்டது.*

*🔛 10.12.2018 ❓❓❓*

_முதல் 10 பத்திகளைமீண்டும் ஒருமுறைவாசித்துவிட்டு 10.12.2018-ஐஎதிர்கொள்ள JACTTO-GEOமாநில உயர்மட்டக்குழுவைக் கேட்டுக்கொள்கிறேன்._

  

கோரிக்கைகளை உடன்நிறைவேற்றாது வேறுஏதேனும் காரணங்களோஅல்லது வழக்கமானவெற்று வாக்குறுதிகளோஅரசின் தரப்பில்தரப்படுமாயின் *உடன்காலவரையற்றவேலைநிறுத்தத்தில்இறங்கியாக வேண்டும்என்பதே ஜாக்டோ-ஜியோவிடம் ஆசிரியர்கள்மற்றும் அரசுஊழியர்களின்எதிர்பார்ப்பாக உள்ளது.*

*_உரிமை வேட்கையோடேஉள்ள ஆசிரியர்கள் & அரசுஊழியர்களின்ஏதிர்பார்ப்பைநிறைவேற்றுமா ஜாக்டோ-ஜியோ❓❓❓❓❓*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here