கலப்பட பொருளை கண்டறிவது எப்படி? – மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சிறப்பு பயிற்சி

கலப்பட பொருட்களை வீடுகளில் கண்டறிவது

எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சிறப்பு பயிற்சி வழங்கி வருகிறது.

தாங்கள் வாங்கும் பொருட் களில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய நுகர்வோருக்கு பயிற்சி அளிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இதற் காக சென்னை முழுவதும் 54 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட் டுள்ளன. ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர், 4 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வீடுகளிலேயே கலப்படத்தை கண்டறியும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
பயிலரங்கத்தில் மாணவர்களுக்கு பல்வேறு வகையான டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, பாலில் கலப்படத்தை கண்டறிய வெள்ளை நிற டைல்ஸ் துண்டில் ஒரு சொட்டு பாலை விடவேண்டும். அது வழிந்தோடும்போது, தூய பாலாக இருந்தால் மெதுவாக ஓடி பாலின் அச்சு விழும். தண்ணீர் கலக்கப்பட்டிருந்தால் வேகமாக ஓடும். அச்சு எதுவும் விழாது.

பாலின் அடர்த்திக்காக கிழங்கு மாவு கலப்படம் செய்யப்பட்டுள் ளதா என்பதை கண்டறிய காயங்களுக்கு போடப்படும் டின்சர் ஆஃப் ஐயோடினை (tincture of iodine) ஊற்ற வேண்டும். பால் ஊதா நிறத்துக்கு மாறினால் கலப்படம் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ளலாம். பாலின் நிறம் மாறாவிட்டால் கலப்படமற்ற பால் என்பதை அறிய முடியும்.
இதேபோல், கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். அதில், ஒரு ஸ்பூன் தேனை விட வேண்டும் . சுத்தமான தேன் மட்டுமே டம்ளரின் அடிபாகத்தில் வந்து நிற்கும். சர்க்கரை பாகு தண்ணீரில் கரைந்து விடும். இதே போல், கடைகளில் பேக்கிங் செய்து விற்கப்படும் டீத்தூள், மஞ்சள், பச்சை பட்டாணி, மிளகுத் தூள் உள்ளிட்டவற்றை தண்ணீரில் போட வேண்டும். கலப்படம் இருந் தால் அதன் சாய நிறம் கரைந்து தண்ணீரின் நிறம் மாறும். இதனை வைத்து கலப்பட பொருட்களை கண்டறியலாம். இதேபோல், 15 ஆய்வு முறைகளை கற்று தருகிறோம். தற்போது சென்னை யில் மேற்கொள்ளப்படும் இந்த பயிலரங்கம் தமிழகம் முழுவதும் படிப்படியாக நடத்தப்பட உள்ளது. இதன் மூலம், வீட்டிலேயே கலப்பட பொருட்களை தடுக்க முடியும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த பயிலரங்கம் தமிழகம் முழுவதும் படிப்படியாக நடத்தப்பட உள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here