பள்ளி கல்வி துறையில் 45 துணை ஆய்வாளர்கள்

சென்னை: பள்ளி கல்வி நிர்வாக சீரமைப்பு திட்டத்தில், 45 துணை ஆய்வாளர் பணியிடங்கள், புதிதாக ஏற்படுத்தி உத்தரவிடப்பட்டுஉள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு, புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மாவட்டங்களில், பள்ளிகளின் நிர்வாகங்களை கவனிக்கவும், பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்யவும், துணை ஆய்வாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். இந்த பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்யவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி துறைக்கு, கூடுதல் செலவு ஏற்படாத வகையில், 45 புதிய பணியிடங்களுக்கு பதிலாக, அரசு பள்ளிகளில், மாணவர்கள் இன்றி காலியாக உள்ள, 45 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அரசுக்கு, ‘சரண்டர்’ செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here