ஓய்வூதியர் உயிர்வாழ்சான்றிதழ் பதியலாம்

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் தங்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும்.2019 -20ம் ஆண்டில் தொடர்ந்து ஓய்வூதியம் பெற இந்தாண்டு டிசம்பருக்குள் உயிர் வாழ் சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். 

ஓய்வூதியரின் கைரேகை பதிவில் தொழில்நுட்ப பிரச்னை இருந்தால் உயிர்வாழ் சான்றிதழை காகித வடிவில் வங்கியில் சமர்பித்து வங்கி மேலாளர் சான்றுடன் மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 83005 81483 அலைபேசியில் அழைக்கலாம் என வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் சுனில் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here