அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு,

மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுரைக்கிணங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருகையினை உறுதிப்படுத்து விதமாக TNSCHOOLS ATTENDANCE APP மூலமாக ஆசிரியர்களால் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவு செய்யாமல் இருப்பதால், தற்போதுள்ள App-ஐ Uninstall செய்து, 05.12.2018 முதல் Updated TNSCHOOLS ATTENDANCE APPஐ Android Mobile-லில் பதிவிறக்கம் செய்து, தினந்தோறும் காலை 09.30 மணி, மதியம் 02.00 மணிக்குள்ளும் இரு வேளைகளில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோர்களால் கண்காணிக்கப்படுவதால் 100 சதவீதம் பள்ளிகள் பதிவேற்றம் செய்தலை, தினந்தோறும் உறுதி செய்யுமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்(பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here