ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் உடற்கல்வி ஆசிரியர் நலச் சங்கம் புகார்

புதுச்சேரி:’ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில், வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை’ என, புதுச்சேரி பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் நலச் சங்கம் போர்க்கொடி உயர்த்தி உள்ளது.புதுச்சேரி ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தல், ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளியில் கடந்த 25ம் தேதி நடந்தது. இதில், 11 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த தேர்தலில் வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என, புதுச்சேரி பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் நல சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.இது தொடர்பாக சங்க பொதுச் செயலாளர் நாராயணன், கூட்டுறவு பதிவாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத் தேர்தல் எந்த முன் ஏற்பாடும் இன்றி அவசர கதியில் நடத்தப்பட்டது. நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுபற்றி அப்போதே ஆட்சேபனை தெரிவித்தோம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. தேர்தல் அதிகாரிகளால் அனைத்து பூத் சிலிப்புகளும் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட சிலரால் பூத் சிலிப் வழங்கப்பட்டது. இது தொடர்பான எங்களது ஆட்சேபனை கண்டுகொள்ளப்படவில்லை. வாக்காளர்களின் புகைப்படம் தெளிவாக இல்லை. இதனால் கள்ள ஓட்டும், ஆள் மாறாட்டமும் நடந்துள்ளது. இது தொடர்பாக எழுத்துபூர்வமாக புகார் தெரிவித்துள்ளோம். விசாரணை நடத்தி, ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்க தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here