ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதல்வர் பழனிசாமி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பதிவில் கூறுகையில் ‘‘பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.

அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடந்த பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் ஜெயக்குமார் அலட்சியமாக நடந்துகொண்டதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அமைச்சரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

 திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து உடனடியாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்’’ என வலியறுத்தியுள்ளார்.   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here