மாணவர்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை  அலுவலகங்கள்
திறக்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கிறது. இதுதவிர 8ம் வகுப்பு தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு என 40 தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்கள் தவிர தனித்தேர்வர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க வசதி இருந்தாலும் சில நேரங்களில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

தேர்வுத்துறை சார்ந்த பணிகளுக்கான பிற மாவட்ட மாணவர்கள் சென்னைக்கும், நீண்ட தொலைவில் உள்ள மணடல  அலுவலகங்களுக்கும் சென்று வருவதை தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறையின் அலுவலகங்களை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அலுவலகங்கள் செயல்படத் தொடங்கும். இந்த அலுவலகங்களுக்கு அதிகாரிகளாக உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here