இனி காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்


பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம்., இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெறலாம். இந்த புதிய வசதியை, ஏ.டி.எம்., தயாரிப்பு நிறுவனமான, என்.சி.ஆர்., கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, டில்லி – ஹரியானா எல்லையில் உள்ள, குருகிராம், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய இடங்களில், இந்த நவீன, ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட்டுள்ளன. விரைவில், நாட்டின் முக்கிய நகரங்களில், இவ்வகை இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

வங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள, ‘லைவ் டெல்லர்’ பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம்., இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும். அவர் அனுமதி அளித்ததும், ஏ.டி.எம்., சாதனத்தில், காசோலையை செலுத்த வேண்டும்.

அத்துடன், ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே, ‘ஸ்கேன்’ செய்து, அளிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும், ஏ.டி.எம்., மானிட்டர் திரை மீது, வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து, ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.

இந்த முறையில், உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு, உடனடியாக பணம் பெற முடியும். அத்துடன், பணம் டெபாசிட் செய்வதற்கும், தன் விபரங்களை புதுப்பிப்பதற்கும், இந்த புதிய, ஏ.டி.எம்., பயன்படும். தற்போது, இரண்டு வங்கிகள், இந்த புதிய, ஏ.டி.எம்.,மை பயன்படுத்த துவங்கியுள்ளதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கறது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here