வருகிறது புதிய வருமானவரி சட்டம் : அடுத்தஅதிரடிக்கு தயாராகிறார்மோடி

  

புதுடில்லி:பிரதமர் மோடிதலைமையிலான மத்தியஅரசு, பணமதிப்பு நீக்கம்,ஜி.எஸ்.டி., அறிமுகத்தைதொடர்ந்து, அடுத்தஅதிரடியாக, வருமான வரிசட்டத்தில், சீர்திருத்தம்செய்ய தயாராகி வருகிறது.

அதன்படி, 1961ம் ஆண்டு,வருமான வரிச் சட்டத்திற்குபதிலாக, தற்போதையபொருளாதார சூழலுக்கும்,தேவைக்கும் ஏற்ப, புதியவருமான வரிச் சட்டம்அறிமுகமாகஉள்ளது.இதற்காக,ஏற்கனவே, அரவிந்த் மோடிதலைமையில், செயல்திட்டக் குழு அமைக்கப்பட்டுஉள்ளது. இக்குழு, புதியவருமான வரி சட்டவரைவறிக்கையைதயாரிக்கும் பணியைமேற்கொண்டு வந்தது.

இப்பணி முடிவடையாதநிலையில், கடந்தசெப்டம்பரில், அரவிந்த்மோடி ஓய்வு பெற்றார்.

புதிய தலைவர்

இதையடுத்து, மத்திய அரசு,புதிய வருமான வரி சட்டவரைவறிக்கை தயாரிக்கும்குழு தொடர்பாக, ஏற்கனவேபிறப்பித்த உத்தரவில்மாற்றம் செய்துள்ளது.இதுகுறித்து, மத்தியநிதியமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கை:

  

மத்திய நேரடி வரிகள்வாரிய உறுப்பினர்,அகிலேஷ் ரஞ்சன், புதியவருமான வரி சட்டவரைவறிக்கைதயாரிப்பதற்காகஅமைக்கப் பட்டு உள்ளசெயல் திட்டக் குழுவின்தலைவராக நியமிக்கப்பட்டுஉள்ளார். மற்றபடி, குழுஉறுப் பினர்களில் எந்தமாற்றமும்செய்யப்படவில்லை.

செயல் திட்டக் குழு, 57ஆண்டுகள் பழமையானவருமான வரிச் சட்டத்திற்குமாற்றாக, புதிய வருமானவரிச் சட்ட வரைவறிக்கைதயாரித்து, 2019, பிப்., 28க்குள், அமைச்சகத்திற்குவழங்கும்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.வரிசெலுத்து வோருக்கும்,தொழில்நிறுவனங்களுக்கும்பயனளிக்கும் வகையில்,புதிய வருமான வரி சட்டவரைவறிக்கை இருக்கும்என, எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்கள்

இது குறித்து, மத்திய அரசுஅதிகாரி ஒருவர்கூறியதாவது:பலநாடுகளில், வருமான வரிவிகிதம் குறைவாகஉள்ளது. வரி விலக்குசலுகைகள் எதுவும்வழங்கப்படுவதில்லை.இதே கொள்கையை மத்தியஅரசு பின்பற்றும் என,எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், வருமானவரிசெலுத்தும்ஏராளமானோர் பயன்பெறுவர். தாமாக முன்வந்துவருமான வரிசெலுத்துவோர்எண்ணிக்கை அதிகரிக்கும்.

  

தற்போது, தனிநபருக்கான,வருமான வரி விலக்குவரம்பு, 2.50 லட்சம் ரூபாயாகஉள்ளது. இதை, 5 லட்சம்ரூபாயாக உயர்த்துவதுகுறித்து, செயல் திட்டக் குழுபரிசீலிக்கும்.வருமான வரிவிகிதம்

  

, 10 – -30 சதவீதத்தில்இருந்து, 5 – – 20 சதவீத மாககுறைக்கப்படும் என,தெரிகிறது.வெளிநாடுகளை பின்பற்றி,நாட்டின் பொருளாதாரதேவையை கருத்தில்கொண்டு, சிறந்த வரிநடைமுறைகள்அறிமுகப்படுத்தப்படும்.

அமெரிக்க அதிபர்டொனால்டு டிரம்ப், முதலீடுகளை ஈர்க்கவும்,வேலைவாய்ப்பு களைஅதிகரிக்கவும், ‘கார்ப்பரேட்’நிறுவனங்க ளுக்கானவரியை குறைத்து, வெற்றிகண்டு உள்ளார். இதேபாணியை, மத்திய அரசுபின் பற்றும் என,எதிர்பார்க்கப்படுகிறதுஇவ்வாறு அவர் கூறினார்.

வரி குறையும்

கார்ப்பரேட் நிறுவனங்கள்வரியை, 30 சதவீதத்தில்இருந்து, 25 சதவீதமாககுறைக்க, மத்திய அரசுமுடிவுசெய்துள்ளது.ஏற்கனவே,ஆண்டுக்கு, 250 கோடிரூபாய் விற்றுமுதல் உள்ளநிறுவனங்களுக்கான வரி, 25 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here