ஆன்லைன் மூலம் இணைய வங்கி பயன்படுத்தி பணம் அனுப்புகின்றனர். இது தவிர, ஆன்லைனில் ஷாப்பி–்ங் செய்வது அதிகரித்து வருகிறது. இணைய திருடர்களிடம் இருந்து பாதுகாக்க இதோ சில டிப்ஸ்…

* ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும்போது, நம்பிக்கைக்கு உரிய இணையதளத்தை பயன்படுத்தவும். முன்பின் தெரியாத, புதிய இணைய தளங்களில் பொருட்கள் வாங்குவது ஏமாற்றத்துக்கு வழி வகுக்கும். பாதுகாப்பான பரிவர்த்தனைக்கும் உத்தரவாதம் இருக்காது. 
* இணைய வங்கிச்சேவை பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பாஸ்வேர்ட் மாற்றவும். பரிவர்த்தனைக்கு பிறகு வங்கிகளில் இருந்து வரும் எஸ்எம்எஸ்களை பார்த்து உறுதி செய்யவும்.
* மோசடி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம். கிரெடிட் கார்டு அல்லது டெபிட்கார்டு, வங்கி கணக்கு விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம்.
* ஆன்லைனில் பொருட்கள் வாங்க ஒரே டெபிட் கார்டை பயன்படுத்தவும். பிரீபெய்டு கார்டுகளும் வந்து விட்டன.
* இணையதள முகவரியில் https என தொடங்குகிறதா என பார்க்கவும். S இல்லாத இணையதளங்கள் ஆபத்து.
* பொது வை-பை பயன்படுத்தி எந்த பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம்.
* மூன்றாம் நபர் பேமன்ட் முறையில் பணம் செலுத்துவதற்கு முன்பு, ‘வெரிசைன்’ போன்ற லோகோவை பார்க்கலாம். அதை கிளிக் செய்து இணைய சான்றை அறிந்து கொள்ளவும்.
* கம்ப்யூட்டர் கீ போர்டு பயன்படுத்துவதை விட, வங்கிகள் அல்லது பேமன்ட் நிறுவனங்களின் விர்ச்சுவல் கீபோர்டு பயன்படுத்தவும்.
* பயர்பாக்ஸ், குரோம் என எந்த பிரவுசரை பயன்படுத்தினாலும், அதில் உள்ள ‘பிரைவேட் டேப்’ தேர்வு செய்து பயன்படுத்தவும். இவ்வாறு செய்தால் உங்கள் இணைய செயல்பாடுகள் பதிவாகாமல் தடுக்கலாம்.
* வங்கி, ஷாப்பிங் உட்பட எந்த இணையதளமாக இருந்தாலும் அதில் உள்ளீடு செய்த பிறகு மறக்காமல் ‘லாக் அவுட்’ கிளிக் செய்து வெளியேறவும். வெறுமனே பிரவுசரை மூட வேண்டாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here