• மேஷம்
  மேஷம்: தன்னிச்கையாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை  நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.  
 • ரிஷபம்
  ரிஷபம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.  உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.     
 • மிதுனம்
  மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களுடன் போராட  வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.  
 • கடகம்
  கடகம்:
  மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் லாபம்  கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.   
 • சிம்மம்
  சிம்மம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னை களையும் எளிதாக சமாளிப் பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியா பாரத்தில் புதிய  வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.    
 • கன்னி
  கன்னி: உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை  முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.  
 • துலாம்
  துலாம்: இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனப்போர் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள்.  அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.   
 • விருச்சிகம்
  விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந் துக் கொடுத்துப் போவது நல்லது. வியா பாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.  உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக்கூறுவார்கள். நாவடக்கம் தேவைப் படும் நாள். 
 • தனுசு
  தனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட  அணுகுமுறை யால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள். 
 • மகரம்
  மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடு வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி  வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். அமோகமான நாள். 
 • கும்பம்
  கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக  ஊழியர்கள் உதவுவார் கள். நினைத்தது நிறைவேறும் நாள்.   
 • மீனம்
  மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள்.  வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here